பழநி; பழநி முருகன் கோயில் சென்று வர பயன்படும், ரோப் காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் ஜூலை 15, முதல் துவங்கி 31 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பழநி முருகன் கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று நிமிடத்திற்குள் கோயிலுக்கு சென்று வர ரோப்கார் சேவை பயன்படுகிறது. ஜூலை 15, முதல் ரோப் கார் நிறுத்தப்பட்டு, வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கப்பட உள்ளன. இதில் ரோப் கார் வடக்கயிறில் இருந்து பெட்டிகள் அகற்றப்பட்டு பராமரிப்பு நடக்கும். மேலும் பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் ஆகியவை புதிதாக மாற்றப்பட உள்ளன. 31 நாட்கள் இப்பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. அதன் பின் சோதனைகளுக்குப் பிறகு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச் வசதியை பயன்படுத்த கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.