திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக இரண்டாம் யாகசாலை பூஜை



மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக நேற்று முன்தினம் யாக சாலை பூஜை துவங்கியது. இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூலை 14 அதிகாலை வரை 8 கால யாகசாலை பூஜை நடக்கிறது. ஜூலை 14 அதிகாலை 3:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம் முடிந்து யாக சாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு புனித நீர் அடங்கிய குடங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 5:25 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்