திருப்பூர்; குரு பூர்ணிமாவை முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீசத்ய சாயி அறக்கட்டளை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வழிபாடுகள் நடந்தது.
குரு பூர்ணிமாவை முன்னிட்டு, பி.என்., ரோடு சத்ய சாய் சேவா ஆன்மிக மையத்தில், அதிகாலையில் ஓம்கார சுப்ரபாதம் மற்றும் நகர் சங்கீர்த்தனம் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயா அகாடமியில், மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை நடத்தினர். ஆன்மிக மையம் மற்றும் ராயபுரம் மையத்திலும் ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, மாலை ராயபுரம் மையத்தில், ஆனி மாத மகா குரு பவுர்ணமி முன்னிட்டு பல்லக்கு சேவை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசத்ய சாய் பகவான் திருவுருப்படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ராயபுரம் மையத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மங்கள ஆரத்தி நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி மற்றும் வழிபாடுகளில் சாய் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.