Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 48 · 102 / 159

கலைநயத்தை காண்போம்

  • மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரம் அதிக சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்ததால் ‘சித்திர கோபுரம்’ என்ற பெயர் உண்டு. இக்கோபுரத்திலுள்ள 25 முகம் கொண்ட சிவன் சிற்பம் அவசியம் காண வேண்டியதாகும். இதை மேற்கு கரையிலுள்ள துலாபார தூண் அருகில் நின்று பார்க்கலாம்.
  • மீனாட்சியம்மன் சன்னதி எதிரில் கிளிக்கூட்டு மண்டப தூண்களில் அர்ஜுனன், கர்ணன், பீமன், நகுலன், சகாதேவன் மற்றும் வாலி, சுக்ரீவன் ஆகியோரது சிற்பங்கள் உள்ளன.
  • பொற்றாமரைக்குளத்தின் வடக்கு கரையில் உள்ள தூண்களில் மதுரை நகரை நிர்மாணித்த குலசேகர பாண்டியன், அமைச்சர் தனஞ்செயனின் சிலைகள் உள்ளன.
  • கிழக்கு வாசல் வழியாக சன்னதிக்குள் நுழையும் பாதையிலுள்ள முதலிப்பிள்ளை மண்டபத்தில் தாருகாவனத்து ரிஷிகள், பிட்சாடனாராக வந்த சிவன், ரிஷிபத்தினிகள், மோகினி வேடத்தில் திருமால் சிற்பங்கள் கலை நுணுக்கமிக்கவை.
Advertisement
Advertisement
Top
Advertisement