Meenakshi Amman Temple

Special supplement · Part 1 · page 27 · 15 / 159

பொன்னான பொற்றாமரைக்குளம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள தீர்த்தமே பொற்றாமரைக்குளம்.

  • தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற கோயில்களில் இருக்கும் குளங்களுக்கு சிவகங்கை தீர்த்தம் என்று பெயர். எடுத்துக்காட்டாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீர்த்தத்திற்கு சிவகங்கை தீர்த்தம் என்றே பெயர். பொற்றாமரைக்குளத்திற்கு ‘சிவகங்கை தீர்த்தம்’, ‘திருச்சந்நிதித்தீர்த்தம்’ என்ற பெயர்கள் உண்டு.
  • இக்குளத்தில் நீராடிய வர்கள் பல நன்மைகள் அடைவர். இதனால் இதை ‘சிவ தீர்த்தம்’ என்பர்.
  • உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களை அகற்றி ஒளியை உண்டாக்குவதால் ‘ஞானதீர்த்தம்’ என்பர்.
  • பிறவி என்பதே இல்லாமல் செய்து முக்திக்கு வழி வகுப்பதால் இதை ‘முக்தி தீர்த்தம்’ என்பர்.
  • சான்றோர்கள் இதை உத்தமத்திலும் ‘உத்தம தீர்த்தம்’ என புகழ்ந்து போற்றியுள்ளனர்.
  • இது தர்மம் (அறம்) வழங்குவதால் தர்ம தீர்த்தம் என்றும், இது பொருள் (அர்த்தம்) தருவதால் ‘அர்த்த தீர்த்தம்’ என்றும், விருப்பங்களை (இன்பம்) நிறைவேற்றுவதால் ‘காமதீர்த்தம்’ என்றும், ஆன்மாக்களுக்கு வீடு பேற்றினை நல்குவதால் ‘மோட்ச தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுவதை திருவிளையாடல் புராணம் மதுரைக்காண்டம் குறிப்பிடுகிறது. பொற்றாமரைக்குள தீர்த்தமானது ஆன்மாக்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு தரும்.
  • இத்தீர்த்தம் பாவம் என்னும் விறகிற்கு தீயாக விளங்குகிறது என போற்றுகிறார் பரஞ்ஜோதி முனிவர்.
Advertisement
Advertisement
Top
Advertisement