Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 32 · 37 / 159

மாணவர்களுக்கான கோயில்

நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். ஜாதகத்தில் புதன் திசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். புதன் கிழமைகளில் காலை 6:00 – 7:00 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் செய்தால் கல்வியில் சிறக்கலாம். நைவேத்யத்தை கோயிலில்தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. சுமாராக படிக்கும் மாணவர்களுக்காகவே மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் இங்கு அருள்புரிகின்றனர்.

Advertisement
Top
Advertisement