Special supplement · Part 2 · page 45 · 91 / 159
பெரிய மூர்த்தி
பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையில் உள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும் இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர் பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள். சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்ஸவ நடராஜர் அருகில் இருக்கிறார்.