Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தசாவதார திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு தசாவதார திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன.(தசாவதாரம்)
  உற்சவர்: லட்சுமி நாராயணர்
  ஊர்: ஸ்ரீரங்கம்
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருமங்கையாழ்வாருக்கு உற்சவம், கார்த்திகை சொக்கபானை உற்சவம், மார்கழி உற்சவம், மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  கோயில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தசாவதாரக் கோயில், ஸ்ரீரங்கம்-620 006, கொள்ளிடம் ஆற்றங்கரை, திருச்சி மாவட்டம்.  
   
போன்:
   
  +91-431- 243 59 05 
    
 பொது தகவல்:
     
  திருமங்கையாழ்வாருக்கு தனி சன்னதியுள்ளது. அகோபில மட ஜீயர் ஸ்வாமி 44வது பட்டம் ஸ்ரீ ஆதிவண்சட கோப யதீந்திர மஹா தேசிகன் மற்றும் அவருடைய குரு 41வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீவன் சடகோபல லட்சுமி நரசிம்ம ஸ்ரீ சடகோப யதீந்திர மஹா தேசிகன் ஆகியோரின் திருவரசு (ஜீவசமாதி) தனி சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமாக இருப்பதால் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோயிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்து பலனடையலாம். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியவுடன் 10 அவதார மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  மூலஸ்தானத்தில் தசாவதாரங்கள்: ஸ்ரீஅகோபில மடத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கோயில் மூலஸ்தானத்தில், மச்சா, கூர்மா, வராக, நரசிம்மா ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்குசக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில், அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும், கல்கி அவதாரம் கேடயம், கத்தியுடனும் பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். மூலஸ்தானத்தில் சேனாதிபதி விஸ்வக்சேனர் வீற்றிருக்கிறார். இங்குள்ள உற்சவ மூர்த்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.

தனிசிறப்பு: கோயில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே உள்ளார். பத்து அவதாரங்களுக்கும் ஒரு கலசம் வீதம் விமானத்தில் பத்து கலசங்களும் காணப்படுகிறது. மச்சா (மீன்), கூர்மா (ஆமை) அவதாரங்கள் அவதார நிலையிலேயே மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளன. கல்கி அவதாரத்தில் குதிரைவாகனத்தில் பெருமாள் கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களுடன் தோன்ற இருப்பதை இங்கு காணலாம்.

தோஷநிவர்த்தி: இங்குள்ள ஒன்பது அவதாரமும் ஒவ்வொரு கிரகங்களின் தலைவராக கருதப்படுகிறது. குறிப்பாக மச்சா- கேது, கூர்மா- சனீஸ்வரர், வராக -ராகு, நரசிம்மா - செவ்வாய், வாமன- குரு, பரசுராம-சுக்கிரன், ராம- சூரியன், பலராமன்- மாந்தி(துணைகோள்), ஸ்ரீ கிருஷ்ணா - சந்திரன். கிரகங்கள்தோஷ நிவர்த்தி தலமாக இருப்பதால் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோயிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்து பலனடையலாம்.
 
     
  தல வரலாறு:
     
  "உலகத்தில் தருமம் அழிந்து, அதர்மம் ஓங்குகிற சமயம், நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார். உலக உயிர்களுக்கு இறைவன் தன் கருணையால் இன்பம் ஊட்டுவதற்கே அவதாரங்களை இறைவன் எடுக்கிறார். அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை ஏற்று, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோயிலாகும்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோயில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar