|
அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
கார்த்திகை முதல் தேதி துவங்கி, 41 நாட்கள் மண்டல பூஜை காலம், 41ம் நாள் கரமனை ஆற்றில் ஆராட்டு விழா. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இங்குள்ள மூலவர் விமானம் சிலந்தி வலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 5மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்
கரமனை, திருவனந்தபுரம்
கேரளா. |
|
| | |
|
போன்: | | | | | |
+91 471- 245 1837 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
மேற்கூரை இல்லை என்றாலும், சிலந்திவலை போல கூம்பு ஒன்றை அமைத்துள்ளனர். கருவறையைச் சுற்றி நான்கு புறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவர்களின் நடுவில் பலகணி(ஜன்னல்) வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு நேர் எதிரில் மட்டும் அல்லாது, பலகணிகளின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். திருவனந்தபுரத்தில் பல சாஸ்தா கோயில்கள் இருந்தாலும், மிக பழமையான சாஸ்தா கோயில் இதுதான். எனவே இவருக்கு ஆதி சாஸ்தா என்ற பெயரும் இருக்கிறது. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சாஸ்தாவை வழிபடுகின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
பக்தர்கள் இருமுடி கட்டி நெய் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
திருவனந்தபுரம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பக்தர் களும், கரமனையைச் சேர்ந்தவர்களும் அவரவர் வீட்டில் இருமுடி கட்டி, இந்தக் கோயிலுக்கு வந்து நெய் அபிஷேகம் செய்கின்றனர். இதை சபரிமலையாகவே கருதுகின்றனர். எல்லா மலையாள மாத பிறப்பு நாட்களிலும், முக்கிய விழா நாட்களிலும் நெய் அபிஷேகம் செய்கின்றனர். இப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்வோர், சாஸ்தாவுக்கு முதல் பத்திரிகை வைக்கின்றனர். இங்குள்ள அரசமரத்தடியில் சிவலிங்கமும், நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
மலைநாட்டிலுள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இப்பகுதியை ஆண்ட கர மகாராஜா பல கோயில்களை கட்டினார். ஒருசமயம், காட்டு வழியே அவர் சென்று கொண்டிருந்த போது, சிலந்திகள் வலை பின்னிய ஒரு இடத்தில் சாஸ்தா சிலை கிடந்ததைக் கண்டார். அதை ஊருக்குள் கொண்டு சென்று கோயில் கட்ட முடிவு செய்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, என்னை ஊருக்குள் கொண்டு வர முயற்சிக்காதே. நான் கானகத்தில் இருப்பதையே விரும்புபவன். சிலந்திகள் வலை கட்டியிருக்கும் இடத்திலேயே கோயில் எழுப்பு. கோயிலுக்கு கூரை அமைக்காதே. வானமே எல்லையாக இருக்கட்டும், என்றார். அதன்படி, அவரைக் கண்டெடுத்த இடத்திலேயே கோயில் கட்டினார். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்குள்ள மூலவர் விமானம் சிலந்தி வலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|