அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
லக்ஷ்மி நரசிம்மர் |
|
உற்சவர் | : |
லக்ஷ்மி நரசிம்மர் |
|
தல விருட்சம் | : |
தொம்மஅளரி மரம் |
|
தீர்த்தம் | : |
நாகநதி |
|
புராண பெயர் | : |
அவுபள நாயனார் |
|
ஊர் | : |
சிங்கிரி கோயில் |
|
மாவட்டம் | : |
வேலூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
பிரதி சுவாதி நட்சத்திரத்தென்று திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி. ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி பெருவிழா. தமிழ் மாதாந்திர விழாக்களும், பண்டிகைகளும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
|
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இங்கு ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தாயார் பொதுவாக இடது திருமடியில் தான் வீற்றிருப்பார். ஆனால் இத்திருத்தலத்தில் தாயார் வலது திருமடியில் அமர்ந்திருக்கும் கோலம் மிகச் சிறப்பானது. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6.00 முதல் 12.00 மணி வரை மாலை 4.00 முதல் 6.30 மணி வரை | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மசுவாமி திருக்கோயில்
சிங்கிரி கோயில், வேலூர் 632 312. |
|
| | |
|
போன்: | | | | | |
+91 94430 99043 | |
|
|
|
தலபெருமை: | |
|
|
|
|
கி.பி 1337 - * 1363 ஆம் ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த முதலாம் சம்புவராய மன்னர் இராச.நாராயணன் என்பவரால் கட்டப்பட்ட கோயிலாக கி.பி 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டு தகவலின் படி அறியமுடிகிறது. கி.பி 1426 ஆம் ஆண்டினைச் சேரந்த விஜயநகர மன்னரின் கல்வெட்டு ஒன்றில் இவ்வூரினை ஓபிளம் என்றும், பெருமாளை சிங்கப்பெருமாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே மருவி சிங்கிரி கோயில் என்றானது.
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
பல்லவராயர் காலத்தில் இராஜவர்மன் என்ற மன்னரின் கனவில் வந்து தனக்கு கோயில் கட்டும் படி பெருமாள் சொல்லவே, மன்னரும் இங்கு கோயில் கட்டினார். மலைமேல் கோயில் கொண்டுள்ள நரசிம்மரின் இராஜ கோபுரம் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஆயிரத்து நானூறு வருடங்கள் பழமையான இந்தக் கோயில் மிக ரம்மியமான மலைகள் சூழ்ந்த பகுதியில் 80 அடி உயரமும் 100 படிகளும் கொண்ட சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. முதல் ஐம்பது படிகள் ஏறியவுடன் உள்ள குன்றில் பால ஆஞ்சநேயர் நம்மை வரவேற்கின்றார். பாலகர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்.
மேலே ஏறி சென்றால் கர்ப்க்கிரகமும் அர்த்தமண்டபமும் சேர்ந்து அமையப்பெற்ற மிகப்பெரிய கருவறையில் சுமார் ஆறு அடி உயர ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நான்கு திருக்கைகளுடனும். மேல் இரண்டு திருக்கைகளியில் சங்கு சக்கரமும், இடது கையை தனது மடியின் மீதும், வலது கையால், தனது வலது திருமடியில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி தாயாரை ஆலிங்கனம் செய்த வண்ணமும் சாந்ந சொருபியாய் காட்சியளிக்கிறார். கர்ப்பக்கிருகத்தின் எதிரே பெரியதிருவடியான கருடன் காட்சியளிக்கிறரார். இத்திருத்தலத்தில் கருவறையின் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள கல்வெட்டுகள் சம்புராயர் மற்றும் விஜயநகர மன்னர்கள் ஆண்டகாலத்தைச் சேர்ந்தவையாகும். கல்வெட்டுகளில் இத்தல பெருமாளை அவுபள நாயனார் என்று குறிப்படப்பட்டுள்ளது. |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|