அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
நீலமேகப் பெருமாள் |
|
உற்சவர் | : |
நீலமேகப் பெருமாள் |
|
அம்மன்/தாயார் | : |
கமலநாயகி |
|
ஊர் | : |
குளித்தலை |
|
மாவட்டம் | : |
கரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
நீலமேகப் பெருமாள் கமலநாயகி கிழக்கு திருமுக மண்டலம் நின்று திருக்கோலம் |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 7:30 – 11:30 மணி, மாலை 5:30 – 8:30 மணி | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிக நீலமேகப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
குளித்தலை,குளித்தலை போஸ்ட், கரூர் மாவட்டம் 639104. |
|
| | |
|
போன்: | | | | | |
+91 94438 36500, 04323 224 222 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
எல்லோரின் வாழ்க்கையிலும் இன்னொரு வாசலை திறந்துவைக்கும் சாவி திருமணம். உறவுகளும் நட்புகளும் சங்கமித்து புதிய உறவை சேர்த்துவைக்கும் வைபவம் இது. பலருக்கு இது எளிதாக நடைபெறுகிறது. சிலருக்கு மிகவும் சிரமப்பட்டு வரன் தேடினாலும் பல்வேறு காரணங்களால் தடைபட்டு விடுகிறது. அதிலும் சிலருக்கு திருமண பிராப்தமே கைகூடி வருவதில்லை. இதனால் பெற்றோருக்கு வெளியே சொல்ல முடியாத துக்கம் தொண்டையை அடைக்கும். யாரிடம் சென்று முறையிடுவது. என்ன பரிகாரம் செய்யலாம் என்று கோயில் கோயிலாக கால்கள் தேய தேய நடக்கும் பெற்றோரா நீங்கள்... கவலைப்படாதீர்கள். இனி உங்கள் கால்களுக்கு விடிவுகாலம் வந்தாச்சு. ஆமாம்! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நீலமேகப்பெருமாள் கோயிலுக்கு வாருங்கள்.
|
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
திருமணத்தடை நீங்க வேண்டிக்கொள்கின்றனர்.
| |
|
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
கோயிலுக்குள் கால் வைத்தவுடன் குளிர்ந்த காற்று நம் உடம்பை தொட்டுச் செல்லும். அதற்கு காரணம் ராஜ கோபுர வாயிலை அடைந்தவுடன் கொடிமரம் அருகே நந்தவனம் பூத்துக்குலுங்குகிறது. அதற்கு எதிரே வைகுண்ட ஏகாதசி மண்டபம். உள்ளே நுழைந்ததும் அழகே வடிவான நீலமேகப்பெருமாளை ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய கல்யாண கோலத்தில் காணலாம். அருகே கமலநாயகி தாயார் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இப்படி உட்பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆண்டாளையும் தரிசிக்கலாம்.
ந்தக்காலத்தில் கோயிலுக்கு வரும்முன் காவிரியில் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதுபோலவே கோயிலுக்கு செல்லும் முன் காவிரியில் நீராடுங்கள். பாவங்கள் அனைத்தும் கரைந்தோடும். பிறகு நீலமேகப்பெருமாளிடம் மனதார வேண்டி கொள்ளுங்கள். மனசின் வலியை போக்குவார். நீங்கள் தேடும் வழியையும் காட்டுவார். பிறகு என்ன? கோயில் கோயிலாக அலைந்த கால்கள் இனி மண்டபம் மண்டபமாக சுற்ற ஆரம்பிக்கும்.
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
ஸ்ரீரங்கத்திலிருந்து காவிரி தென்கரையில் 45கிமீ தூரம் கடம்பந்துறை அருகில் திருச்சி கரூர் சாலையில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியன் திருப்பணி செய்தது. மகேந்திரவர்மனும், முதலாம் நரசிம்ம பல்லவனும் திருப்பணி செய்துள்ளார்கள். ஸ்ரீரங்கத்தைப் போல் 7 மதில் சுவர்கள் அமைந்திருந்த கோயில். அனந்தாழ்வான் என்கிற பக்தர் இக்கோயில் மற்றும் திருப்புல்லாணி கோயில் கட்டமைப்புகளுக்கு 18ம் நூற்றாண்டில் உதவியதாக செய்தி.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
பச்சை மலையில் இருந்து கல் கொண்டு வந்ததால், இவர் ‘பச்சைப்பெருமாள்’ எனவும் அழைக்கப்படுகிறார். இவர் மீது பக்தி கொண்ட முதலாம் பராந்தகச்சோழனும், நங்கை கொற்றி அரசி, உத்தர மேரூர் அனந்தாழ்வான், வீரபாண்டியன் போன்ற சிற்றரசர்களும் பல திருப்பணிகளை செய்துள்ளனர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|