Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கோட்டை மாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு, அரச மரம்
  ஊர்: ஓசூர்
  மாவட்டம்: கிருஷ்ணகிரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, ஆடிப்பதினெட்டு  
     
 தல சிறப்பு:
     
  கருவறையில் புற்றே மூலவராக சுயம்பு கோட்டை மாரியம்மனாக வழிபடப்படுகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாள் முழுவதும் கோயில் திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஓசூர், கிருஷ்ணகிரி.  
   
    
 பொது தகவல்:
     
  கோயிலுக்கு ளெவளியே வேப்ப மரமும் அரச மரமும் ஓங்கி வளர்ந்திருக்க, அதனடியில் விநாயகரும் ஏராளமான நாகர் உருவங்களும்உள்ளன. கருவறையை நோக்கி சூலம், சிம்ம வாகனம் பலிபீடம் அம்மன் பாதம் அமைந்துள்ளது. கருவறையில் புற்றே மூலவராக சுயம்பு கோட்டை மாரியம்மனாக வழிபடப்படுகிறார். அருகே துர்க்கை அம்மனின் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மனுக்குக் கீழே அந்தர்வாகினியாக ஆறு ஓடிக்காண்டிருப்பதாக ஐதீகம்.  
     
 
பிரார்த்தனை
    
  மணப்பேறு மகப்பேறு கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  பலருக்கு குலதெய்வமாக விளங்கும் இவள் அருளால் மணப்பேறு மகப்பேறு கிட்டுகிறதாம்; அம்மை நோய் உள்பட பல்வேறு உடற்பிணிகள் அகலுகிறதாம். பெரிய திருவிழாவாக, சித்திரையில் மூன்று நாட்கள் ஊர்த் திருவிழா நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் செவ்வாய் வெள்ளி கிருத்திகை, ஆடிப்பதினெட்டு போன்ற தினங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த அம்மனுக்கு காவல் தெய்வமாக ஊரைச் சுற்றி எட்டு அம்மன்கள் கோயில் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  12 ஆம் நூற்றாண்டில் ஓசூர், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளை நாற்பதுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அதில் ஓசூரை ஆட்சி செய்த திருபவனமல்ல பூர்வாதி ராஜ சிவபாதசேகரப்பெருமாள் என்னும் மன்னன், அக்காலத்தில் ஓசூரில் ராம்நகர் பகுதியில் பன்னிரண்டு ஏக்கரில் மிகப்பெரிய மண்கோட்டையைக் கட்டி குடியேறினான். அதற்கு முன்பே அப்பகுதியின் புதர் மண்டியிலிருந்த இடத்தில் இடையர்கள் லிங்க வடிவில் தோன்றியிருந்த புற்றை அம்மனாக பாவித்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், கோட்டையில் குடியேறிய மன்னர், தன் குடும்பத்தார் வழிபடுவதற்கு ஒரு கோயில் கட்ட விரும்பினான். அருகிலிருந்த இந்தப் புற்று அம்மன் அவன் கண்ணில்கூட, அதற்கு ஒரு சிறிய கோயில் எழுப்பி, அன்றாடம் வழிபாடுகளை செய்துவந்தான். அவனது காலத்திற்குப் பிறகு போசள மன்னன் ராமநாதன் ஒசூரை தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சி புரிந்தான். இந்நிலையில் அவனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. எவ்வளவோ வைத்திய் பார்த்தும் அவனுக்கு வந்த நோயைக் குணப்படுத்த முடியவில்லை. ராஜ வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்களின் அறிவுரையின்படி கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்தான். மருந்தால் கட்டுப்படாத அவனது நோய், மாரியம்மனின் அருளுக்கு கட்டுப்பட்டது. பூரண உடல்நலம் பெற்ற மன்னன் அருகில் ராமர், ஈஸ்வரன் கோயில்களையும் கட்டி சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டான். பிறகு பல ஆண்டுகள் சிறப்புடன் ஆட்சிபுரிந்து தனது 39-வது ஆட்சிக்காலத்தில் மண்கோட்டையிலே மரணமடைந்தான்.

அதையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு மைசூரை ஆட்சி செய்த திப்புசுல்தான் ஓசூரைக் கைப்பற்றினான். அப்போது கர்நாடகாவின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் ஆட்சி செய்து வந்தனர். அவர்களுக்கு இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஹெமில்டன் என்ற இன்ஜினியர் கட்டடங்களை வடிவமைத்துக் கொடுத்தார். திறமைசாலியான அவரை ஓசூருக்கு கடத்தி வந்த திப்புசுல்தான் மண் கோட்டை இருந்த இடத்தில் பிரிட்டிஷார் பாணியில் எதிரிகள் நெருங்காதபடி கல்கோட்டை ஒன்றை அரண் போல் எழுப்பினான். 1816 ம் ஆண்டு இந்தக் கோட்டையில் குடியேறிய பிரிட்டிஷ் கலெக்டர் பிரட், அரசுக்குத் தெரியாமல் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள கெனில்வொர்த் வளாகத்திற்குள் ஒரு சொகுசு அரண்மனை எழுப்பினார். பின்னர் இந்த விஷயம் பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிய வர, கலெக்டர் பிரட் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவருக்குப் பின் ஓசூர் கலெக்டராக பதவியேற்ற வால்டர் இலியாட் அந்த சொகுசு அரண்மனையில் தன் மனைவியுடன் குடியேறினார்.

அப்பகுதியில் வசித்து வந்த இந்துக்கள் காலை நேரத்தில் கோட்டை மாரியம்மன் கோயிலில் மணியடித்து வழிபாடு செய்வது வழக்கம். ஒருநாள் அந்த சத்தத்தைக் கேட்டு எரிச்சலடைந்த இலியாட்டின் மனைவி, அவர்களை கண்டபடி பேசிவிட்டார். தன் குழந்தைகளை திட்டினால் எந்த தாய்க்குத்தான் கோபம் வராது? அம்மை நோயால் பாதிக்கப்பட்டாள், கலெக்டரின் மனைவி, மனைவியின் உடல்நலப் பாதிப்புக்குக் காரணம் புரியாமல் தவித்தார் கலெக்டர். இதையறிந்த உள்ளூர் பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொண்டால், அம்மை போய்விடும் என்றார்கள். அதன்படி கோயிலின் நுழைவு வாயிலுக்கு இருபுறமும் யானை உருவம் பொறித்த தூண்களை கட்டித் தருவதாக வேண்டிக் கொள்ள, கலெக்டரின் மனைவி பூரண நலம் பெற்றாள். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அம்மனின் ஆற்றலை உணர்ந்த ஆங்கிலேய அதிகாரிகள், கோட்டை மாரியம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டதாக ரிச்சர்டு கெசட்டியர் என்ற வரலாற்றுப் புத்தகம் தெரிவிக்கிறது. பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில், இன்று ஓசூரில் உள்ள அம்மன் கோயில்களில் பிரதானமாகத் திகழ்கிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் புற்றே மூலவராக சுயம்பு கோட்டை மாரியம்மனாக வழிபடப்படுகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar