வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாள் பிரமோற்சவம், தீபாவளி, ராமநவமி, தெலுங்கு புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, ஆடி புரட்டாசி சனிக்கிழமைகள்.
தல சிறப்பு:
திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளதும், தாயார்களுடன் சேர்ந்து அருள்பாலிப்பதும் விசேஷ அம்சம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில்
சின்ன திருப்பதி
கிருஷ்ணகிரி
பிரார்த்தனை
தீக்காயத்தால் வடு ஏற்பட்டவர்கள், தீக்காயம் ஏற்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் வலி குறையவும், வடு மறையவும் செய்யும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
திருப்பதியில் பெருமாள் தனித்து நிற்கிறார். தாயாரை தரிசிக்க திருச்சானூர் செல்ல வேண்டும். ஆனால் இங்கு பிரசன்ன வெங்கடேஸ்வரர், தாயார்கள் மகாலெட்சுமி, பத்மாவதி ஆகியோருடன் ஒருங்கே கூடி நிற்கிறார். திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளார் என்பது விசேஷ அம்சம். அக்னியின் சக்தி குறைக்கப்பட்ட இடம் என்பதால் தீக்காயத்தால் வடு ஏற்பட்டவர்கள், தீக்காயம் ஏற்பட்டவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் வலி குறையவும், வடு மறையவும் செய்யும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது கூடுதல் விசேஷம்.
தல வரலாறு:
இங்குள்ள வனப்பகுதியில் தான் பாண்டவர்கள் வனவாசத்தை கழித்தனர். ஒருமுறை அர்ச்சுனன் வேட்டைக்கு சென்றான். அப்போது ஒரு பிராமணர் அவனை சந்தித்தார். அர்ச்சுனனிடம், தனக்கு பசி எடுப்பதால் ஏதாவது உணவு தரக் கேட்டுக் கொண்டார். அவர் பிராமணன் என சொன்னதை அர்ச்சுனன் நம்பவில்லை. அவரை ஒரு ராட்சஷன் எனக்கருதினான். அப்போது அந்த பிராமணர் தன் சுயஉருவைக் காட்டினார். அவர் அருகே அர்ச்சுனனால் நிற்க முடியவில்லை. அவரது உடம்பில் இருந்து கடும் வெப்பம் வெளிப்பட்டது. வந்தவர் அக்கினி பகவான் என்பது அவனுக்கு தெரிந்தது. அவரை வழிபட்ட அர்ச்சுனன், அந்தக் காட்டில் வசிக்கும் பாண்டவர்களுக்கு, விலங்குகளால் அடிக்கடி இன்னல் ஏற்படுவதாகக் கூறினான். அக்கினி பகவான் அவனுக்கு நன்மை செய்வதாகக் கருதிக்கொண்டு காட்டின் ஒரு பகுதியில் தீ மூட்டினார். அந்தக் காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷிக்கு இந்த தீ இடைஞ்சலாக இருந்தது. அவர் அக்கினியிடம் என் தவத்துக்கு இடையூறு செய்த நீ பலமிழந்து போவாய் என சாபமிட்டார். அக்கினி வருத்தமடைந்தார். பின்னர் அவர் விஷ்ணுவை வேண்டி இழந்த சக்தியை மீண்டும் பெற்றார். விஷ்ணு அக்கினிக்கு சாப விமோசனம் கொடுத்த இடமே சின்ன திருப்பதி. இங்கு பெருமாள் கோயிலை அக்னி பிரதிஷ்டை செய்தார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:திருப்பதியில் பெருமாள் கையை தாழ்ந்த நிலையில் வைத்திருப்பார். இங்கு பெருமாள் கையை உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் உள்ளதும், தாயார்களுடன் சேர்ந்து அருள்பாலிப்பதும் விசேஷ அம்சம்.
இருப்பிடம் : தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் உள்ளது சின்ன திருப்பதி. இங்கு செல்ல போக்குவரத்து வசதி அதிகமில்லை. ஓசூரிலிருந்து டாக்சிகளில் செல்லலாம்.