Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்)
  ஊர்: தோவாளை
  மாவட்டம்: கன்னியாகுமரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இக்கோயிலில் கந்த சஷ்டி விழாவும், சூரன் திருவிழா, ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை மலர் முழுக்கு விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில், தோவாளை, கன்னியாகுமரி மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  இந்த ஊரில் மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிகின்றனர். 108 படிகள் ஏறிச்சென்றால் குமரன் கோயிலை அடையலாம். இரண்டு பிராகாரங்களைக் கொண்ட சிறிய கோயிலில் குமரன் நான்கு கைகளுடன் மயில் மீது நின்றருளுகின்றான். கருவறையின் முன்னால் அமைந்துள்ள மண்டபத்தை தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் வீரமகேந்திரரும் விநாயகரும் ஆண்டிக்கோலத்தில் முருகனும் காட்சி தருகின்றனர். ராமபிரான், லக்குமணர், சீதாப்பிராட்டியார், அனுமன், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், மீனாட்சி, காமாட்சி ஆகியோரின் சிறிய புடைப்புச் சிற்பங்களை மண்டபத்தூண்களில் காணலாம்.
 
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேற இங்குள்ள முருகனை மனதார வேண்டிச் செல்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகனுக்கு பால்அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சஷ்டி விழாவின் போது முதல்நாள் பாலமுருகன் வடிவத்திலும், சிவபெருமான் வடிவத்திலும், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திலும், 4-வது நாள் சங்கர நாராயணன் வடிவத்திலும், 5-வது நாள் சக்தியின் வடிவத்திலும், 6-வது நாள் போர்க்கோல முருகன் வடிவத்திலும் மூலவர் அலங்காரம் செய்யப்படுவார். வேறு நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப வேலன், வேடன், விருத்தன் ஆகிய கோலங்களில் மூலவரை அலங்கரிப்பதும் உண்டு. இக்கோயிலில் எல்லா மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்னதானமும், கலைநிகழ்ச்சிகளும், ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை மலர் முழுக்கு விழாவும் நடைபெறும். தோவாளை சுப்பிரமணிய சாமி கோயிலில் வடக்குப் பக்கத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கோயில் கி.பி. 15 அல்லது 16ம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும் என்றும், தோவாளைக்கு எதிர்வில்லி சோழபுரம் என்ற பெயரும், இங்குள்ள மலையில் நின்றருளும் முருகனுக்கு திருமலை அமரர் பதிகாத்த நயினார் என்ற பெயரும் இருந்தது என்றும் கல்வெட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.  
     
  தல வரலாறு:
     
  இந்திரன் மும்மூர்த்தியை வழிபட சுசீந்திரம் வரும்போது தோவாளையிலுள்ள மலர்களின் வாசம் அவனைக் கவர்ந்தது என்றும், அம்மலர்களை அவன் தினமும் சுசீந்திரம் எடுத்துச் சென்று சிவவழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும், சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் சென்ற பிறகும் இங்குள்ள மலர்களையே அவன் வழிபாட்டிற்குப் பயன்படுத்தினான் என்றும் கூறப்படுகிறது. விண்ணுலகிற்கு தினமும் மலர் அனுப்பி வைக்க தேவர்களை இந்திரன் தோவாளையில் குடியமர்த்தினான் என்பர். அவ்வாறு இந்திரனால் குடியமர்த்தப்பட்ட தேவர்கள் வாழ்ந்த ஊர், தேவர் வாழ்வினை என்றாகி, பின்னர் தோவாளை என்று மாறியது என்பது செவிவழிச் செய்தி.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar