Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஸ்வேதார்க்கமூல விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஸ்வேதார்க்கமூல விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்வேதார்க்கமூல விநாயகர்
  ஊர்: காசிப்பேட்
  மாவட்டம்: வாராங்கல்
  மாநிலம்: ஆந்திர பிரதேசம்
 
 திருவிழா:
     
  சங்கடஹர சதுர்த்தியன்று ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை இந்த ஆலயத்தில் காண முடியும். நவராத்திரி விழாவின் போது தினம் ஒரு அலங்காரத்தில் விநாயகர் காட்சி தருகிறார். துர்க்காஷ்டமி அன்று இருநூற்றியொரு கிலோ மஞ்சள் பொடியினால் உருவாக்கப்பட்ட கவுரம்மா என்ற பார்வதி தேவிக்கு, மூன்று நாட்கள் வெகு விமரிசையாக பூஜைகள் நடைபெறுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  வெள்ளெருக்கின் வேரில் சுயம்புவாகத் தோன்றியிருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஸ்வேதார்க்கமூல விநாயகர் திருக்கோயில் காசிபேட், வாராங்கல் ,ஆந்திரா  
   
போன்:
   
  +91 870 2566262 
    
 பொது தகவல்:
     
  வட இந்திய பாணியில் முகப்பு அமைக்கப்பட்டு மிகவும் விரிவாகக் கட்டப்பட்டுள்ள இந்த ஆலய வளாகத்தில் ஆதி கணபதி, மஹாலட்சுமி, ஞான முத்ரா, சரஸ்வதி, சந்தோஷிமாதா, சாய்பாபா, சந்தான நாகலிங்கேஸ்வரர், வெங்கடேஸ்வரர், சீதா ராமர், கிருஷ்ணர், அனுமன், நவகிரஹம், சத்யநாராயணர், அய்யப்பன் ஆகியோருக்குத் தனிச் சன்னதிகள் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  தங்கள் கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் 16 செவ்வாய்க்கிழமைகள், 21 செவ்வாய்க்கிழமைகள் என்று தவறாது இங்கு வந்து விநாயகரை வணங்கி வழிபடுகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வேத விற்பன்னர்கள் கணபதி மூலமந்திரத்தினால் விரிவான கணபதி ஹோமம் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  எருக்கில் ஊதா நிறப் பூக்களையும் வெள்ளைநிறப் பூக்களையும் கொண்டு இரண்டுவகை உள்ளன. இவற்றில் வெள்ளெருக்கே விநாயகர் வழிபாட்டிற்குச் சிறந்தது என்று பெரியோர் கூறுகின்றனர். எருக்கிற்கு வடமொழியில் அர்க்கம் என்று பெயர். ஸ்வேதம் என்பது வெண்மையைக் குறிக்கும். ஸ்வேதார்க்க மூலம் என்றால் வெள்ளெருக்கு வேர். நன்கு விளைந்து முற்றிய இந்த எருக்கின் வேர்ப்பகுதியில் தயாரிக்கப்படும் விநாயகர் ஸ்வேதார்க்கமூல விநாயகர் என்று போற்றப்படுகிறார். நாரதாதி புராணம், நூறு ஆண்டுகள் வளர்ந்த வெள்ளெருக்கின் வேர்ப்பகுதி தானே விநாயகரின் வடிவத்தைப் பெற்று விடும் என்று குறிப்பிடுகிறது. வெள்ளெருக்கின் பெருமை பற்றி கணபதி உபநிஷத் சிறப்பாகக் குறிப்படுகிறது.

நன்கு விளைந்த ஒரு வெள்ளெருக்கின் வேர்ப்பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய விநாயகரை மூலவராகக் கொண்டுள்ள ஆலயம். கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகின்ற இந்த விநாயகரை சங்கல்ப்ப சித்தி காரகடு (மனதில் வேண்டிக் கொண்டதை அருள்கின்றவர்) என்று பக்தர்கள் போற்றுகின்றனர். வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற கண்கண்ட தெய்வமாகவும் இவர் திகழ்கிறார். இந்த ஆலயத்தில் இவர் எழுந்தருளியிருப்பதன் பின்னணியில் சுவாரசியமான செய்திகள் கூறப்படுகின்றன.

இந்த ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் பூஜைப் பொருட்களைக் கைகளில் ஏந்தி ஓம் கம் கணபதியே நமஹ என்று கூறியபடியே விநாயகப் பெருமானை வலம் வருகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  தம் பக்தர் ஒருவரின் கனவில் விநாயகப் பெருமான் தோன்றி, நலகொண்டாவைச் சேர்ந்த ஒருவரது வீட்டின் பின்புறம் உள்ள வெள்ளெருக்கின் வேர்ப்பகுதியில் தான் சுயம்புமூர்த்தியாகத் தோன்றியிருப்பதாகத் தெரிவித்தாராம். கனவில் கண்ட கணபதி வடிவைத் தேடியெடுத்த பக்தர் அதைக் கொண்டுவந்து காசிபேட் பகுதியில் சிறிய அளவில் பிரதிஷ்டை செய்தார்.

பக்தர்கள் பெருமளவில் வந்ததில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பிள்ளையாரை ஸ்திர பிரதிஷ்டை செய்வதற்கு முன் விநாயகர் யந்திரத்தை நான்கு திசைகளிலும் உள்ள முக்கியமான புண்ணியத் தலங்களுக்கு எடுத்துச் சென்று பூஜைகள் நடத்தினர்.

பின்னர் விநாயகருக்கு வசந்தோற்சவமும், சித்திபுத்தியுடன் கல்யாண உற்சவமும் விமரிசையாக நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிரபலமான ஐந்து மடங்களின் பீடாதிபதிகள் இங்குவந்து கணபதி யோகம் எனும் பட்டாபிஷேகம் உற்சவத்தினை நடத்தினர். இமாலயத்தில் இருந்த ஒரு பக்தரின் கனவில் விநாயகர் தனக்கு வெள்ளிக் கவசம் வேண்டும் என்று கேட்க, அந்த பக்தர் உடனடியாக இங்கு வந்து வெள்ளிக் கவசம் செய்து விநயாகருக்கு அணிவித்தார். விசேஷ காலங்களில் விநாயகரை தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வெள்ளெருக்கின் வேரில் சுயம்புவாகத் தோன்றியிருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar