Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அழியா இலங்கை அம்மன்
  ஊர்: ராசிபுரம்
  மாவட்டம்: நாமக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இலங்கை அம்மனுக்கான திருவிழா, ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை அடுத்து வரும் திங்கட்கிழமையன்று காய்வெட்டிப் போடுதல் என்ற நிகழ்வுடன் தொடங்குகிறது. விழாவின் இறுதி நிகழ்வாக திருக்கோடிக் கம்பத்தில் ஒரு பெரிய துணியிலான திரியைக் கொண்டு திருக்கோடி ஏற்றப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  கருவறை புற்று வடிவில் அமைந்துள்ளது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அழியா இலங்கை அம்மன் திருக்கோயில் கூனவேலம்பட்டி புதூர் நாமக்கல்.  
   
போன்:
   
  +91 9487491489, 8903791489 
    
 பொது தகவல்:
     
  அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகம் ஆகியோர் அழியா இலங்கை அம்மனின் துணைத் தெய்வங்களாக அமைந்துள்ளனர். அம்மனுக்கு வலப்பக்கத்தில் நான்கு கால் மண்டபத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அத்தனூர் அம்மன், இலங்கை அம்மனின் தமக்கையாக அழைக்கப்படுகிறாள். தனிக் கட்டடம் ஒன்றில் அழியா இலங்கை அம்மனின் குழந்தைகள் என அழைக்கப்படும் 27 குழந்தைகள், உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 27 நட்சத்திரங்களாக வழி படுகின்றனர். இக்கட்டத்தின் இன்னொரு புறத்தில் நாகச் சிற்பங்களைக் காணலாம். கோயிலுக்கு வெளியேயுள்ள பாம்புப் புற்றுகளில் பால் ஊற்றி முட்டைகளை உடைத்து வழிபடுகிறார்கள். இதனால் பிரசவம் சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 
     
 
பிரார்த்தனை
    
  நோய்கள் குணமடைய இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  நோய்கள் நெருங்காமல் இருக்கவும் சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து காணிக்கையாக இப்பசுவின் அருகில் கொண்டுவந்து வைக்கிறார்கள். இதேபோன்று நாய் மற்றும் பாம்பு உருவங்களையும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். உருள்தண்டம் எனப்படும் அங்கப்பிரதட்சண வழிபாட்டை கோயிலில் மும்முறை வலம் வந்து செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அழியா இலங்கை அம்மன் கோயில். நாற்புறமும் மதில் சுவர் எழுப்பப்படும். மூன்று வாயில்களுடன் அதியற்புதமாகத் திகழ்கிறது. வடக்கு, கிழக்குத் திசையிலுள்ள வாயில்கள்தான் தினமும் திறக்கப்படுகின்றன. திருவிழாக் காலங்களில் மட்டுமே மேற்குத் திசை வாயில் திறக்கப்படுகிறது.

வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், முன் மண்டபத்துக்கு எதிரில் வடக்கு வாசலுக்குச் செல்லும் வழியில் 10 அடி உயரத்திலு<மாக கொடிக் கம்பங்களை அமைந்துள்ளன. கருவறை முன் மண்டபம் 16 தூண்களால் எழுப்பட்டுள்ளது. இத்தூண்களில் பல தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள ஊஞ்சலில், திருவிழாவின்போது அம்மனை ஊஞ்சலில் வைத்து பாட்டுப் பாடி ஆட்டுவார்கள். ஊஞ்சலுக்கு அருகிலுள்ள முன் மண்டபத்தில் ஒரு சிறு வட்டக்கல் மீது பூ பொட்டலம் பார்த்தல் என்பது நடைபெறுகிறது. சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பூக்களில் ஏதாவது இரண்டு வகைப் பூக்களை மட்டும் ஒற்றைப் படை எண்ணிக்கையில் பொட்டலம் கட்டிவைத்து, குழந்தையைவிட்டு எடுக்கச் சொல்வர்.

கருவறை, புற்று வடிவில் அமைந்துள்ளது. இப்புற்றில் தலைகீழாக வடக்கு நோக்கி நிற்கும்போது இரண்டு பாதங்களும் மேல்நோக்கி அமைந்திருக்கின்றன. பாதங்களின் விரல்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டும் இப்பாதத்தின்மீது உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

முனியப்பன் கோயிலில் கிழக்கு முகமாக அமைந்த மூன்று முனிகளின் மிகப்பெரிய வடிவத்தைத் தரிசிக்கலாம். முனியப்பனுக்கு பலியிடல் நடைபெறுகிறது. இவரை வணங்கினால் எவ்வித கர்ப்பக்கோளாறும் சரியாகிவிடும். பேய், பிசாசுகளும் அண்டாது என்பதும் நம்பிக்கை. இவரை வணங்கினால் பிள்ளைப்பேறும் வாய்க்கிறது. இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டியும் வேண்டிக் கொள்கிறார்கள்.

முனியப்பனுக்கு முன்பாக மண்சுதையால் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட பசு ஒன்றைக் காணலாம். வீட்டிலுள்ள பசுக்கள் நலத்துடன் இருக்கவும். நோய்கள் நெருங்காமல் இருக்கவும் சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து காணிக்கையாக இப்பசுவின் அருகில் கொண்டுவந்து வைக்கிறார்கள். இதேபோன்று நாய் மற்றும் பாம்பு உருவங்களையும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். உருள்தண்டம் எனப்படும் அங்கப்பிரதட்சண வழிபாட்டை கோயிலில் மும்முறை வலம் வந்து செய்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  சீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீச, அங்கிருந்து கூனவேலம்பட்டி புதூராகிய இங்கு வந்து தலைகீழாக விழுந்தாளாம். அதனால் இங்கு இத்தெய்வத்தின் பாதங்களையே வழிபடுகிறார்கள். இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியாத இலங்கை அம்மன் என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது. இதனால் அழகிய லிங்க(வடிவமான) அம்மன் என அழைக்கப்பட்டு, அதுவே மருவி அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆக, இரு வகையில் பெயர்க்காரணம். ஆரம்பத்தில் புதரும் புல்வெளியுமாக மண்டிக் கிடந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் சொரிந்துவிட்டு சென்றதாம். மாடு சரியாகப் பால் கறக்கவில்லையே என சந்தேகப்பட்ட முதலாளி, மாட்டைப் பின்தொடர்ந்துசென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்துகொண்டார். அவர் கனவில் அம்மன் தோன்றி தன் வரலாறைக் கூற, இங்கே பந்தல் போடப்பட்டு தொடங்கிய வழிபாடு வழிவழியாக வளர்ந்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருவறை புற்று வடிவில் அமைந்துள்ளது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar