Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வீரராகவப்பெருமாள்
  உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வீரராகவப்பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  தல விருட்சம்: மகிழம்பூ மற்றும் வில்வ மரம்
  தீர்த்தம்: கனகாலய புஷ்கரணி
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகம விதி
  புராண பெயர்: திருப்போர்
  ஊர்: திருப்பூர்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் களை கட்டுகின்றன. ஆண்டு திருவிழாவாக, வைகாசி விசாகத் தேர்த்திருவிழா இருந்தாலும், புரட்டாசி உதய கருட சேவை, சுவாமி பிரதான ராஜகோபுரம் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் ராமநவமி, பங்குனி உத்திரம், பிரமோற்சவம், திருவாதிரை, ஆடிப்பூரம், வரலட்சுமி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்படுகின்றன. மேலும் நவராத்திரி, அம்பு சேவை, புரட்டாசி உதய கருட சேவை, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, கூடாரவல்லி உற்சவம், அனுமன் ஜெயந்தி உற்சவங்களும் சிறப்பாக நடக்கின்றன. மார்கழி தேய்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அன்று எம்பெருமானை உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றி விரதம் இருந்து வணங்குவதே வைகுண்ட ஏகாதசியாகும். வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள், பஜனை, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் தன்னை வணங்கும் பக்தர்களை பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. திருசாள கிராமம் : எம் பெருமான் விரும்பி ஏற்றுக்கொண்ட கருமையõன மற்றும் கடுமையான ஒரு வித கல் சாள கிராமம் ஆகும். சாளகிராமம் எனப்படுவது, நேபாளத்திலுள்ள முக்தி நாத், கண்டகி ஆற்றில் மட்டுமே இந்த வகை கல் காணப்படுகிறது. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு மேலாக நதிக்குள் இருக்கும் இந்த கல்லை, அங்குள்ள ஒரு வித புழு, செதுக்குகிறது. முக்திநாத் கோயிலுக்கு திருமண், தீர்த்தம் எடுத்து வரச்சென்று பக்தர்களுக்கு, சாளகிராமம் எனப்படும் இந்த கல், எம்பெருமான் கையில் இருக்கும் சக்கரம் போன்ற அமைப்பில் கருவறையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை - 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை - 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில். திருப்பூர் நகர், திருப்பூர்.641604  
   
போன்:
   
  +91 421-2204101, 9786550555 
    
 பொது தகவல்:
     
  சேர, சோழ, பாண்டிய நாடுகளை போலவே, கொங்கு நாடு என்ற ஒரு தனி நாடு இருந்தது; கொங்கு நாடு 24 உள் நாடுகளாக பிரித்து ஆட்சி நடந்து வந்துள்ளது. பிரிவு நாட்டில் ஒன்றான குறுப்பு நாட்டில்,  திருப்பூர் இடம் பெற்றிருந்தது. குறுப்பு நாட்டின் பெருமையை கூறும் பழங்கால பாடலில், மஞ்சள் இஞ்சி கமுகுதென்னை வளம் மிக்க நாடு  வளர்சோலை மா கதலி வாத்திக்கும் நாடு தஞ்சம் என்று வந்தவரைத் தாபரிக்கும் நாடு... என குறிப்பிடப்படுகிறது; அந்தளவிற்கு, அன்று முதல் இன்று வரை, வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் நகரின் மத்தியில், அனந்தசயன ÷காலத்தில் எம்பெருமான் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் என்ற திருநாமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலித்து வருகிறார். பழங்காலத்தில், மூலவர் மற்றும் இருபுறமும் தாயார்களுக்கு சிறிய அளவிலான விமானங்களுடன் கூடிய கற்கோயில் இருந்துள்ளது. பழைய தூண்கள், ÷மற்கூரைகள் இயற்கை சீற்றங்களாலோ அல்லது முகலாயர் படையெடுப்பால் சிதிலமடைந்திருக்கலாம் என செவிவழி செய்தி உள்ளது. பழைய ÷காயிலுக்கு பதிலாக, கடந்த 1939ல் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நரசிம்மர் தூண் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள  சிற்பங்களை ஆய்வு செய்ததில், ஏறத்தாழ 12ம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியல் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இக்கோயில் குறித்து கூறப்படும் செவிவழிச்செய்திகள், புராண கதைகளில், வாலி வணங்கிய பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோயிலுக்கும், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோயிலுக்கும் சுரங்க பாதை இருந்தது என கூறப்படுவதும் பழமையை உறுதிப்படுத்துகிறது. பழமை கூறும், கல்வெட்டுக்கள் உள்ளிட்டவை கிடைக்காத நிலையில், செப்பு பட்டயங்கள் மூலம் , பெருமாள் ÷காயிலுக்கு மைசூர் மன்னரால் கோயிலுக்கு 345.35 ஏக்கர் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. பின்னர்,  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இனாம் சாசனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கருவறையில் வீற்றிருக்கும், வீரராகவப் பெருமாள்,  கோயில் அமைவதற்கு முன் இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்ததாகவும், பிற்காலத்தில் கோயில் உருவாக்கப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக செவி வழி செய்தி உண்டு.

வில்வ மரத்தினடியில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதும் ஒரு சிறப்பாகும். அதே போல்,  இக்கோயில் தீர்த்தக்குளமும் மிகவும் புராதனமானது. கிரேதாயுகத்தில் பிரம்மனாலும், ஸ்ரீ தேவியாலும் வழிபட்ட  இக்கோயில் திருக்குளம், கனகவல்லி  தாயாராலேயே தோற்றுவிக்கப்பட்டு, கனகாலயம் என அழைக்கப்பட்டதாக தல வரலாறு உள்ளது. இப்போது கோயில் வளாகத்திற்குள் கனகாலய புஷ்கரணி என்ற பெயரில் திருக்குளம் அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  பெருமாள் சதா சர்வ காலமும் பக்தர்களை பார்த்த வண்ணம் அருள்பாலிப்பதால், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை தந்தருள்கிறார். இங்குள்ள ஆஞ்சநேயரை வணங்குவோர்க்கு புகழ், வலிமை, புகழ் பெறுவதாகவும், யோக ஹயக்கிரீவரை வணங்குவதால் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவதாகவும் நோய் நொடியின்றி வாழ தன்வந்திரி பெருமாளை பிரார்த்திக்கின்றன் இப்படி ஏராளமான பிரார்த்தனைகள் நிறை÷வறுவதால் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஸ்ரீ கனகவல்லி தாயார் , ஸ்ரீ பூமி தேவி தாயார் : பெருமாள் கோயில்களில், பெரும்பாலும் தாயார்கள், எம்பெருமானுடன் கருவறையில் வீற்றிருப்பர். இங்கு, இரு தாயார்களும், கருவறை விமானங்களுடன் கூடிய தனி, தனி சன்னதிகள் எழுந்தருளியுள்ளனர். உட்பிரகாரத்தில் மூலவர் மற்றும் இரு புறமும் தாயார்கள் என்ற அமைப்பில் உட்பிரகார மண்டபத்தில் அமைந்துள்ளது.பெருமாளுக்கு வலது புறத்தில், சிரசு பகுதியில் செல்வங்கள் அருளும் ஸ்ரீ தேவி இக்கோயிலில், கனகவல்லி தாயார் என்ற திருநாமத்தில் எழுந்தருளியுள்ளார். அபய ஹஸ்த முத்திரையில், அமர்ந்த கோலத்தில் தாயார் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.இடது புறத்தில், ஸ்ரீ பூமிதேவி தாயார் நின்ற கோலத்தில், எழுந்தருளியுள்ளார்.

அற்புத சக்தி நிறைந்த வீர ஆஞ்சநேயர் :
கோயில் வளாகத்தில், தனி சன்னதியில் ஹனுமந்தராய சுவாமி எழுந்தருளியுள்ளார்.மிகவும் பழமையான புடைப்பு சிற்பமாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தொட்டி பீடத்தில் வாலில் மணியுடன், இடுப்பில் கத்தியுடன், ஓங்கிய ஒரு கையும், இடது கையில் சவுபந்திகா மலருடன் அற்புத கோலத்தில் காணப்படுகிறார். புடைப்பு சிற்பத்தில், ஆஞ்சநேயரின் ஒரு பகுதி முகம், வடக்கு பார்த்து காணப்படுகிறது. எம்பெருமானை தரிசிக்கும் வகையில்,  வீர ஆஞ்சநேயர் அமைந்துள்ளதும், வீர ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளதும் சிறப்பாகும். இவரை வணங்குவோருக்கு,  அறிவு, தெளிவு, அஞ்சாமை, வலிமை, புகழ் என அனைத்தும் அருள்பாலித்து வருகிறார்.

ஸ்ரீ சுதர்சன யோக நரசிம்மப் பெருமாள் : பக்தர்களுக்கு எவ்வித தீங்கும் நேராமல் காக்க, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோயிலில் ஸ்ரீ சுதர்சன யோக நரசிம்ம பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருமாலுக்கு உரிய ஆயுதங்கள் ஐந்து ; அதில், புனிதம் வாய்ந்தது சுதர்சனம் எனப்படும் சக்கரம் ஆகும்; தமது வலக்கரத்தில் எம்பெருமான் இதனை தாங்கியுள்ளார். சிவ பெருமான் தனது சக்தி மற்றும் அக்னியை இணைத்து சுதர்சன சக்கரமாக வழங்கியதால், எம்பெருமான் கையில் தாங்கியுள்ள சக்கரம் சிறப்பு பெறுகிறது. வராக அவதாரத்தில் விஷ்ணுவுக்கு கோரைப்பற்களாகவும், நரசிம்ம அவதாரத்தில்  கூர்மையான நகங்களாகவும், பரசுராம அவதாரத்தில் கோடாரியாகவும், கிருஷ்ண அவதாரத்தில் சிசுபாலனை வதம் செய்யும் ÷பாதும், வாமன அவதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கமண்டலத்தில் வண்டு உருவத்தில் வந்து நீர் வராமல் தடுத்தும் என பல அவதாரங்களில் திருமாலுக்கு உதவியர்  ஸ்ரீ சக்ரத்தாழ்வார். இங்கு, தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுதர்சனப் பெருமாள், அறுகோண வடிவத்திற்குள் அக்னி ஜ்வாலை போன்ற முடி, மூன்று கண்கள், கோரைப்பற்கள், பல்வேறு ஆயுதங்களை தாங்கிய 16 திருக்கரங்கள், சக்கரம் சுழன்று பாய்வது போன்ற பிரத்யோக வடிவில் சக்கரத்தாழ்வார் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். அதே சன்னதியில், மேற்கு நோக்கி யோக நரசிம்மராக காட்சியளிக்கிறார். ஒரே விக்ரகம்; இரு முகம் என அற்புதமான திருக்கோலத்தில் இங்கு சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மராக எழுந்தருளியுள்ளார்.

கல்விச் செல்வம் அருளும் ஸ்ரீ ஹயக்கிரீவர்: மக்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிட அருளும் ஸ்ரீ ஹயக்கிரீவர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். ஹயம் என்றால் குதிரை; குதிரை முகம் கொண்டவர்; புராணத்தில், மது, கைபவர்  என்ற அரக்கர்கள் நான்கு வேதங்களையும் கடலுக்கு அடியில் மறைத்து விட்டனர். பெருமாள் குதிரை முகத்தில், கடலுக்குள் சென்று வேதங்களை மீட்டதாக புராணத்தில் கூறப்படுகிறது. கல்வி வரம் அருளும் எம்பெருமான் இங்கு அற்புத வடிவத்தில் அருள் பாலித்து வருகிறார்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் : பக்தர்களுக்கு ஏற்படும் தீங்குகளை துரும்பாக விலக்கும் எம்பெருமான், இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாளாக எழுந்தருளியுள்ளார். இரணியனை வதம் செய்த உக்கிரம் தனியாத நரசிம்மரை, குளிர்விக்க மகாலட்சுமியே பூலோகம் வந்து, சாந்தப்படுத்தியதால் லட்சுமி நரசிம்ம பெருமாளானார். நரசிம்மரின் மடியில் மகாலட்சுமி அமர்ந்துள்ள அற்புதமான கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் : நோய் நொடியின் ஆரோக்கிமான உடல் நலத்துடன் பக்தர்கள் வாழ அருளும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். காத்தல் கடவுளான எம்பெருமான், சயன கோலத்தில் மூலவராகவும், பல்வேறு அற்புத வடிவங்களில் தனி சன்னதிகளில் எழுந்தருளி வருவதும் இக்கோயிலின் சிறப்பாகும்.

106 திவ்ய தேசத்தை தரிசிக்கும் பலன் இக்கோயிலில் உண்டு ஸ்ரீ மத் நாராயணன் எங்கும் நிறைந்து, எப்பொருளிலும் எழுந்தருளியிருந்தாலும், குறிப்பிட்ட சில ஊர்களும், கோயில்களும் சிறப்பு பெற்றவையாக உள்ளன. அவை திவ்ய தேசங்கள், புராண தலங்கள், அபிமான தலங்கள் என குறிப்பிடப்படுகிறது. இத்தலங்களுக்கு சென்று வழிபட்டால், அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அவ்வாறு உள்ள 108 திவ்ய தேசங்களில்,  நில உலகில் காண முடியாத திருப்பரமபதம், திருப்பாற்கடல் தவிர, ஸ்ரீரங்கம், அரிமேய விண்ணகரம், திரு அன்பில், திரு ஆதனுõர், திருக்குடந்தை, திருமணிக்கூடம், திருக்கூடலூர், ஒப்பிலியப்பன் கோயில், திருவெள்ளக்குளம் என சோழ நாட்டு திருத்தலங்கள் 40லிருந்தும், திருக்கோவலூர், திருவஹீந்தபுரம் என நடு நாட்டு திருப்பதிகளிலிருந்தும், தொண்டை நாட்டு திருப்பதிகளிலிருந்தும், வட நாட்டு திருப்பதிகளாக, திருக்கண்ட மென்னும் கடிநகர், திருச்சாளக்ராமம், அஹோபிலம் திருச்சிங்கவேள் குன்றம், திருவடமதுரை(மதுரா), திருப்பிருதி (÷ஜாஷிமட்), திருவதரியாச்ரமம் (பத்ரிநாத்) திருவேங்கடம்(திருப்பதி) மற்றும் 13 மலை நாட்டு திருப்பதிகளிலிருந்தும், பாண்டிய நாட்டிலுள்ள திவ்ய தேசங்கள் 18லிருந்து என 106 திவ்ய தேசங்களிலிருந்து, திருமண், தீர்த்தம் மற்றும் திருதுளா (துளசி) பக்தர்களால் எடுத்து வரப்பட்டுள்ளது. கொண்டு வரப்பட்ட திருமண், கொடிமரம் மற்றும் பலி பீடத்திற்கு முன்பு, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நரசிம்மர் தூண் : கோயில் சொர்க்க வாசல், திருக்குளத்திற்கு அருகில் நரசிம்மர் தூண் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் மற்றும் எம்பெருமானின் அவதாரங்கள் இத்தூணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. குழந்தை கிருஷ்ணருக்கு பெண் சாமரம்  வீசுவது போலவும், வில்லுடன் ராமர் நின்ற கோலத்திலும், விஷ்னு அமர்ந்த கோலத்திலும், ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும், நான்கு பெண்கள் ஒரு வட்டமாக நடனம் ஆடி வருவது போலவும், பின்னிப்பிணைந்த சர்ப்பங்கள் என அற்புதமான பல சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. எம்பெருமானின் அவதாரங்கள் ஒருங்கே அமைந்துள்ளதும், அனைத்து அம்சமாகவும் எழுந்தருளியுள்ளதும் சிறப்பான ஒன்றாகும். இத்தூண், சக்தி மிகுந்த பழ நூற்றாண்டு பெருமை வாய்ந்த கோயிலுக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் வழிபடப்பட்டு வருகிறது. நரசிம்மர் தூணுக்கு அருகிலேயே, பெருமாளுக்கு உகந்த, கோயில் தீர்த்தமாக வழங்கப்படும், நாராயணனின் அங்கமாக விளங்கும் அழகான துளசி மாடம் அமைக்கப்பட்டுள்ளது.

எம் பெருமானின் அற்புத திருக்கோலம் :
காத்தல் கடவுளான எம்பெருமான், நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், சயன கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில், ஆதி சேஷ சயன திருக்கோலத்தில் ஸ்ரீ வீரராகவ பெருமாளாக திருப்பூரில் எழுந்தருளியுள்ளார். சயன கோலத்தில் பெரும்பாலும், எம்பெருமான் பார்வை  மேல் நோக்கிய நிலையில் இருக்கும். இங்கு, நேராக பக்தர்களை பார்த்து அருள்பாலிக்கும் அற்புத நிலையில் காட்சியளிக்கிறார். புஜங்க சயனமாக தென் திசையில் சிரம் வைத்து, வட திசை திருப்பாதம் நீட்டி, மேற்கு திசை முதுகு காட்டி, கிழக்கு திசையில் திருமுகம் காட்டி, ஆனந்த நிலையில், நாடி வரும் பக்தர்களை பார்வையால் ஆட்கொள்ளும் அற்புத கோலம் வேறு எங்கும் காண்பதற்கு அரிதான திருக்கோலமாகும். அதோடு, ஸ்ரீ தேவியின் மறு உருவமாக கருதப்படும் தாமரை மீது, எம்பெருமான் திருப்பாதம் அமைந்திருப்பதும் சிறப்பாகும். அதோடு, தலைக்கு திண்டு இருப்பதற்கு பதில், இங்கு தானிய அளவீடுகளுக்கு பயன்படுத்தும் படி வைத்து, தேடி வருபவர்களுக்கு படியளக்கும் அற்புத பெருமானாக காட்சியளிக்கிறார் என்று பட்டாச்சார்யார்களும், பக்தர்கள் பரவசமடைகின்றனர். தென்கலை மரபுடைய இக்கோயிலில், பழங்காலம் தொட்டே, பாஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கிறது. பிரம்மம், முக்தி, போகம், யோகம்,  பிரஞ்சம் ஆகிய ஐந்து தத்துவங்களில், ராத்ரம் (அறிவு) ஏற்பட வழி காட்டப்படும் பாஞ்ச ராத்ரம் முறையில் இக்கோயிலில் பூஜைகள் நடந்து வருகிறது.

ஸ்ரீ ராமானுஜர் வழிபட்ட தலம் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களில், காத்தல் தொழிலலை செய்யும் விஷ்ணுவை பரம்பொருளாக கொண்ட வைணவ இறை தத்துவத்தை அனைவருக்கும் எளிமையாக எடுத்துரைத்தவர் ஸ்ரீ ராமானுஜர். ஆழ்வார்களில் முதலாமானவரான ராமானுஜர்,  இங்கு மங்களாசாஸனம் பாடியுள்ளார். ஸ்வணபுரீ நிவாஸாய சேஷ பர்யங்க ஸாகினேஸ்ரீ பூமி நீளா சமேதாய ஸ்ரீ வீர ராகவ மங்களம் என்ற ராமானுஜரின் பாடலால் இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் பட்டாச்சார்யார்களால் பூஜிக்கப்படுகிறார். மேலும், பொய்கையாழ்வார்,  பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குமுதவல்லி சமேத திருமங்கையாழ்வார் ஆகிய அனைவரும் இக்கோயிலில் எழுந்தருளி வருகின்றனர்.

இரண்டு தல விருட்சங்கள்:
கோயில்களிலுள்ள தல விருட்சங்களுக்கு என்ற ஒரு சிறப்பு உண்டு; அங்கு எழுந்தருளியுள்ள சுவாமி, அங்குள்ள தல விருட்சங்களில் எழுந்தருளி வருவதாகவும், 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கவில்லை என்றால், தல விருட்சத்தில் அமர்ந்து அருள்பாலிப்பதாகவும் ஐதீகம். இங்கு மகிழ மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன. இதனால், இங்கு எழுந்தருளியும்ம எம்பெருமானின் அருள் சிறப்பானதாக இருக்கும். வில்வ மரம் சிவ ரூபமாக  கருதப்படுகிறது; எம்பெருமானுக்காக இங்கு சிவனே தல விருட்சமாக  எழுந்தருளியிருப்பது சாலச்சிறப்பாகும். மகிழ்ச்சியை அளிக்கும், மகிழ மரமும் இங்கு தல விருட்சமாக உள்ளது. இம்மரம், கனகவல்லி தாயாருக்கு நிழல் தரும் வகையில் தென் புறம் அமைந்துள்ளது. ஒவ்வொரு கோயில்களுக்கும் சிறப்பு சேர்ப்பது மூர்த்தி, தலம், தீர்த்தம். அவ்வகையில்,  இரண்டு தல விருட்சங்கள் கோயிலுக்கு சிறப்பு சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு, இறைவனின் மற்றொரு அம்சமான அரச மரங்களும் கோயில் வளாகத்தில் உள்ளதும், இம்மரங்களின் நிழலில் கோயில் அமைந்துள்ளதும், வெளிப்பிரகாரம் சுற்றும் பக்தர்களுக்கு பக்தியோடு, உடல் நலன் காக்கும் அம்சமாகவும் அமைந்துள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  வெள்ளியங்கிரிமலையிலிருந்து பெருகி வரும் காஞ்சி மாநதி எனப்படும் நொய்யல் ஆற்றின் கரையில், குலோத்துங்கன் செங்கண்ணன் பணித்த பல வளங்களும் நிறைந்து, ஸ்ரீபுரி ஸ்ரீ புரம் என பெயர் வழங்கப்பட்டதாக பழங்கால பாடல் மூலம் அறிய முடிகிறது,  இதற்கு, மகாலட்சுமி வாசம் செய்யும் ஊர் என பொருள்படும். காஞ்சிமாநதியின் தென் பகுதியில், தற்போது தாராபுரம் என அழைக்கப்படும் விராட புரத்தில், முன்பு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞானவாசம்) வாழந்து வந்தனர். அப்போது இதையறிந்த கவுரவர்களில் மூத்தவரான, துரியேõதனன், விராடனுக்கு உரிய பசுக்களை கவர்ந்து சென்றான். இதை அறிந்த அர்ச்சுனன் உள்ளிட்ட பாண்டவர்கள் திருப்போர் புரிந்து பசுக்களை மீட்டு திரும்பினர். திருப்போர் நடந்த இடம் என்பதால், திருப்போர் என பெயர் பெற்று, அது நாளடைவில் மருவி திருப்பூர் என பெயர் பெற்றது. அச்சமயத்தில், பசுக்களை அடைத்து வைத்திருந்த அருகிலுள்ள ஒரு பகுதி, இன்றளவும், பெருந்தொழுவு என பெயர் அழைக்கப்படுகிறது. நமது ஊரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோயிலில், பாண்டவர்கள் போருக்கு பயன்படும் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அம்மனின் அருள் பெற்று காஞ்சிமாநதிக்கரையில் போர் நடந்ததாக வரலாறு உள்ளது. மாயமான சீதையை தேடிய ராமனின் காலடி பதித்த ஊராகவும் இது இருந்துள்ளது என்ற செய்திகளும் உள்ளன. இத்தகைய சிறப்புகளை பெற்ற திருப்பூரின் மத்தியில், மிகவும் புராதனமான கோயிலாக ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் தன்னை வணங்கும் பக்தர்களை பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar