Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கருணாகர வெங்கட ரமணப் பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி- பூதேவி
  ஊர்: கருவலூர்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு தமிழ் மாதமும் இரண்டாம் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை விமரிசையாக நடைபெறுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் மாத ஏகாதசி தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மார்கழி மாதம் முழுவதும் பெருமாளுக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவர் புறப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.  
     
 தல சிறப்பு:
     
  மாதத்தில் பல நாட்கள், காலை 6.30 மணியிலிருந்து 6.50 மணிக்குள் பெருமாள் மீது சூரிய ஒளி விழுகிறது. இக்காட்சியை தரிசிப்பது மிகவும் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கானூர் ரோடு, கருவலூர், அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம். 641 670  
   
போன்:
   
  +91 98423 90849, 98656 66012 
    
 பொது தகவல்:
     
  அர்த்த மண்டபத்தில் மகாவிஷ்ணு, ராமானுஜர், கோதண்டராமர் அருள்கின்றனர். கருவறைக்கு வெளியே ஜெயன், விஜயன் துவார பாலகராக வீற்றிருக்க, உள்ளே மூலமூர்த்தியாக ஸ்ரீதேவி-பூதேவி சமேத கருணாகர வெங்கடரமணப் பெருமாள் நின்ற கோலத்தில் எட்டு அடி உயரத்தில் கருணையே உருவாகக் காட்சியளிக்கிறார். இங்கு பெருமாள் தனது இடது கையை இடுப்பில் வைத்தும், வலது கையை அபய முத்திரையில் வைத்துள்ளதும் சிறப்பு.
 
     
 
பிரார்த்தனை
    
  நவகிரகதோஷமுள்ளவர்கள் இங்கு ஏராளமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  நவபாஷாணங்களால் உருவான இவர்களை வழிபடுபவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். பெருமாளுக்கு பாலபிஷேகம் நடக்கும்போது வெள்ளை நிறப் பால் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. அதை இன்றளவும் பக்தர்கள் காணலாம். இப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அருந்தினால் நோய், நொடி நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள கருடன் மற்றும் ஆஞ்சநேயரின் சிற்பம் சோழர் கால சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்றாக விளங்குகின்றன.  
     
  தல வரலாறு:
     
  நவபாஷாணத்தால் உருவான பெருமாளும், தேவியரும் சேவை சாதிக்கும் தலம், கருவலூர். ஊருக்கு இப்பெயர் வந்ததே இறை நிகழ்வதால்தான் என்பதை சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தவர் கூறிய போதுதான் தெரியவந்துள்ளது. அவிநாசி திருத்தலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி, முதலை உண்ட பாலகனை மீட்க, வறண்ட தாமரைக்குளத்தில் நீர் நிரப்புமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறார். கருமேகம் சூழ மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் எழுந்தருளினர். தலையில் கங்கையுடன் பார்வதி சமேதராக கங்காதரன் எழுந்தருளி கங்கையை இறக்கிவிட்டார். அந்த வெள்ளம், நள்ளாற்றில் பெருகிச் சென்று தாமரைக்குளத்தை அடைந்தது. நீர்ப்பெருக்கில் தோன்றிய முதலை, பின்னர் பாலகனை உமிழ்ந்தது.

இந்நிகழ்ச்சி நடப்பதற்காக, கருவிலிருந்து மழை பொழிந்த காரணத்தால், இவ்வூர் கருவலூர் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள நள்ளாற்றில் நீராடி கங்காதேஸ்வரரை வழிபட்ட காமதேனு, இறைவன் அருளால் கருவைச் சுமந்து கன்றை ஈன்றதால் கருவலூர் என அழைக்கப்படுவதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் எழுந்தருளிய இத்தலத்தின் மகிமையறிந்த வீர ராஜேந்திர சோழன் கி.பி. 1226-ம் ஆண்டில் சோழர் மற்றும் விஜயநகர நாயக்கர் கால கட்டடக் கலையுடன் இணைத்து  இங்கு பெருமாளுக்கு கோயில் கட்டினான். கல்வெட்டுகளில் வீர ராஜேந்திர விண்ணகரம் என்று ஊரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ஒரு சமயம், நவபாஷாணத்திற்காக கயவர்கள் தாயாரின் பாதங்களைச் சுரண்டி எடுத்துள்ளனர். அப்போது பெருமாள் சிறு திருவிளையாடலாக தாயாரின் காலில் ரத்தம் வர வைத்ததாகவும்; அதைக் கண்டு பயந்துபோன கயவர்கள், தங்களின் தவறுக்காக வருந்தி பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மாதத்தில் பல நாட்கள், காலை 6.30 மணியிலிருந்து 6.50 மணிக்குள் பெருமாள் மீது சூரிய ஒளி விழுகிறது. இக்காட்சியை தரிசிப்பது மிகவும் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar