Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வேங்கடேசப் பெருமாள்
  அம்மன்/தாயார்: அலர்மேல் மங்கை
  ஊர்: ஊத்துக்குளி
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  திருமலை திருப்பதி போலவே எம்பெருமானுக்குரிய அனைத்து உற்சவங்களும் இக்கோயிலிலும் கொண்டாடப்படுகின்றன. பெரிய திருவடி என்று சொல்லப்படும் கருடாழ்வாருக்கு கருட சேவை உற்சவம் மிகவும் கோலாகலமாக நிகழ்த்தப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் வெங்கடேசப்பெருமாள் திருப்பதி பெருமாளைப் போன்று இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில், ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் அருகில், திருப்பூர்.641 601  
   
போன்:
   
  +91421-2244623/ 2221315-20 
    
 பொது தகவல்:
     
  பத்மாவதி தாயார் என்று வணங்கப்படும் அலர்மேல் மங்கைத் தாயார் தனிக்கோயிலில் நாச்சியாராக, பெரிய தாமரையில் அமர்ந்து, மேல் இரு திருக்கரங்களில் தாமரைகள் ஏந்தியும், மற்ற கரங்கள், அபய, வரத ஹஸ்தமாகக் கொண்டு காட்சி தருகின்றாள். முகத்தில் இதமான புன்னகை பொலிய, விழிகளில் தயை வெள்ளமெனப் பாய்கிறது. ஏன் அஞ்சுகிறாய் நான் இருக்கிறேன், பயப்படாதே என்று சொல்லாமல் சொல்லும் தாயாரின் விழிகள் அனைவரையும் தைரியமடையச் செய்கின்றன. தும்பிக்கையாழ்வாரான விநாயகருக்கும், ஹயக்ரீவர், சுதர்ஸனர், நரசிம்மர் ஆகிய தெய்வ மூர்த்தங்களுக்கும் தனித்தனிச் சன்னிதிகள் உண்டு.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்களின் மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வாழ்வில் இனிமையைக் கூட்டுவதால் இங்கு வந்து
பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இக்கோயிலிலுள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெண்ணெய் சார்த்தி வழிபடுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் 2003-ம் வருடம் நடைபெற்ற வேளையில் மந்திர சக்தி ஊட்டப்பெற்ற புனிதநீரை கருவறை விமானத்தின் மீது ஊற்றிய போது மூலவர் சிலைக்கு முகத்திலும், திருமேனியிலும் வியர்த்துக் கொட்டியது. மந்திர சக்தியையும் வீரியத்தையும் அந்த வேங்கடவன் சிலை தன்னுள் கிரகித்துக் கொண்டபோது, அதுவரை கற்சிலையாக இருந்த மூலவருக்குத் தெய்வீகப் பிராண சக்தி ஏற்பட்டு, வியர்த்துக் கொட்டியது. பட்டுத் துணியால் பெருமாளின் முகத்திலும் திருமேனியிலும் உண்டான வியர்வையை துடைக்க துடைக்க, மீண்டும் மீண்டும் அந்தத் திருமலையப்பனுக்கு வியர்த்தது. ஒருபுறம் பட்டு விசிறினாலும், மற்றொரு புறம் வெண் சாமரத்தினாலும் வெகு நேரம் வீசிய பின்பே பெருமானின் திருமேனி குளிர்ந்தது. அதே சமயத்தில் வானத்தில் மூன்று கருடப் பட்சிகள் கருவறை விமானத்தை மும்முறை வலம் வந்தன. மந்திரம் பொய், தெய்வம் கற்பனை என கூறுவோர் இவ்வதிசயத்தைக் கண்டும், கேட்டும் வாயடைத்து நின்றனர். இக்கோயில் நிர்மாணத்தையும், மூலவர் வடிவமைப்பையும் திருமலை திருப்பதி ஆஸ்தான ஸ்தபதியே வடிவமைத்தார் என்பது சிறப்பு.  
     
  தல வரலாறு:
     
  திருமலை திருப்பதியில் எம்பெருமானை தரிசிப்பது போன்றே ஒரு பிரமையை ஏற்படுத்தும் திருப்பூரில் உள்ள வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். அழகிய கமலம் போன்ற கண்கள், கூர்மையான நாசி, குவிந்த வாய், பெரிய கிரீடம், நெற்றியில் திருமண் காப்பு, முகவாயில் பச்சைக்கற்பூரம் இரணடு கரங்களில் சங்கும் சக்கரமும் தாங்கி, ஒரு கரத்தை தனது முழங்கால் அருகிலும் வைத்துக் கொண்டு, சாட்சாத் திருமலை வாசனாகவே இத்தல பெருமாள் தரிசனம் தருகின்றார். திருமார்பில், தாயார் சேவை சாதிக்கிறார். என்னை வணங்கினால், என் திருவடியைப் பிடித்துக் கொண்டால், இந்த சம்சாரமாகிய சமுத்திரம், முழங்கால் வரையில்தான். சுலபமாக கரையேறி விடலாம் என்று உணர்த்துவது போல் தோன்றுகிறது பெருமாளின் திருக்கோலம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் வெங்கடேசப்பெருமாள் திருப்பதி பெருமாளைப் போன்று இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar