Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருமூலநாதர் சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திருமூலநாதர் சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருமூலநாதர் சுவாமி
  அம்மன்/தாயார்: குங்கும சுந்தரி
  தல விருட்சம்: வில்வமரம்
  ஊர்: பூவாளூர்
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமி தினத்தன்று ஜேஷ்டாதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதேப்போல் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்று மூலவர் திருமூலநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. சித்திரை முதல் பங்குனி மாதம் வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் புஷ்பத்தால் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் செல்வபேறு கிடைக்கும், வைகாசி மாதத்தில் சந்தனத்தால் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் உயர்பதவி கிடைக்கும், ஆனி மாதத்தில் பழவகைகளால் நடைபெறும் அபிஷேகத்தில் நடக்கும் மன விருப்பம் நிறைவேறும், ஆடி மாதத்தில் கரும்பு சாறால் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் பகை அழியும், ஆவணி மாதத்தில் சர்க்கரையால் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் உலக விருப்பம் நிறைவேறும், புரட்டாசி மாதத்தில் அதிரசத்தால் நடைபெறும் அபிஷேகத்தில் செல்வப்பேறு கிடைக்கும், ஐப்பசி மாதத்தில் அன்னத்தால் நடைபெறும் அபிஷேகத்தால் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் அறம், பெருள், இன்பம் கிடைக்கும், கார்த்திகை மாதத்தில் தீபத்தில் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் பிரம்மஹத்தி தோஷஹம் நீங்கும், மார்கழி மாதத்தில் நெய்யால் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் மோட்சம் கிட்டும், தை மாதத்தில் சாம்பார் சாதத்தில் தேனால் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் ஆயுள்பலம் கூடும், மாசி மாதத்தில் கிருதகம்பளம் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் ஆரோக்கியம் மேப்பாடும், பங்குனி மாதத்தில் தயிரால் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் புத்திரபாக்கியம், ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு மாத அமாவாசை தினத்தன்று பித்ரு தர்ப்பணம் மற்றும் பித்ரு ஹோமம் நடைபெறுகிறது. அதேப்போல் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், நவராத்திரி, சோமவாரம், அன்னாபிஷேகம், திருவாதிரை ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  
     
 தல சிறப்பு:
     
  12 திருமுறைகள் புத்தகங்களை கொண்டு திருமுறை கோயில் இங்கு உள்ளது கூடுதல் சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திருமூலநாதர் சுவாமி திருக்கோயில், பூவாளூர், திருச்சி.  
   
    
 பொது தகவல்:
     
  மண்டபத்தினுள் 63 நாயன்மார்கள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி, தனி சன்னதியில் மஹாலிங்கம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வெள்ளை வாரண விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. அதேப்போல் பாலதண்டாயுதபாணி, கெஜலட்சுமி, ஜேஷ்டாதேவி ஆகியோர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரி தனி சன்னதிகள் உள்ளது. நடராஜர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவகிரகம், பைரவர், சனீஸ்வரர் ஆகியவைகளுக்கு சன்னதிகள் உள்ளன. மேலும் 12 திருமுறைகள் புத்தகங்களை கொண்டு திருமுறை கோயில் இங்கு உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
 
     
 
பிரார்த்தனை
    
  உயர்பதவி கிடைக்கவும், செல்வப்பேறு கிடைக்கவும், ஆரோக்கியம் மேம்படவும், புத்திரபாக்கியம், ஐஸ்வர்யம் கிடைக்கவும் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
 
    
 தலபெருமை:
     
  கோயிலுக்கு முன்பு பங்குனி ஆற்றங்கரையில் கயா பல்குனி ருத்ர சித்தர் சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று ஹோமம் நடைபெறுகிறது. பிதுர் ஹோமம் நடத்துதல் அரிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பிதுர்க்களே இத்தலத்திற்கு நேரில் வந்து அர்க்யங்களை, வேள்வி ஆஹீதிகளை ஏற்று ஆசிர்வதிக்கும் அற்புத சக்தியை கொண்ட தலம் இது. இதனால்தான் இத்தலம் பக்தர்களால் தென்னிந்திய கயா என்று அழைக்கப்படுகிறது. இதுவரை வாழ்வில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், படையல், பூஜைகளை முறையாக செய்யாதவர்கள் இங்கு வந்து கயா பல்குனி ருத்ர சித்தர் சன்னிதியில் பித்ரு ஹோமங்களை தொடர்ந்து அமாவாசை தோறும் நடத்தி வர வேண்டும்.

வசதி இல்லாதவர்கள் தலத்திற்கு வந்து கோயிலை தூய்மை படுத்தும் உழவார திருப்பணிகளில் பலருடன் சேர்ந்து செய்தால், பிதுர் ஹோமம் நடத்திய பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். முறையற்ற வகைகளில் காமத் தீயசெயல்களுக்கு ஆட்பட்டோர் தமது தீயச் செயல்களுக்கு வருந்தி உண்மையை சரியென திருந்தி சீர்மையாய் வாழ்ந்திட இத்தலத்தில் உள்ள கயா பல்குனி ருத்ர சித்தர் சன்னதியில் வைராக்யம், சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். காமச் தீயச்செயல்கள் மிகவும் அறுவறுப்பானவை. இதற்கு பிராயச் சித்தமாய் பங்குனி ஆற்றங்கரையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட உடல் சுத்தி, உள்ள சுத்தி, புத்தி சுத்தி, மன சுத்தி, அறிவு சுத்தி ஆகிய ஐந்து சுத்திகளும் கிடைக்கும். வில்வ மரத்தை ஸ்தல மரமாக கொண்ட இத்தலத்தில் தினமும் திருக்கோயில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பங்குனி ஆற்றங்கரையில்; உள்ளது குங்கும சுந்தரி உடனுறை திருமூலநாதர் சுவாமி திருக்கோயில். கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும் மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தினுள் உள்ளே மூலவர் திருமூலநாதர் சுயம்பு வடிவமாகவும்,  அதே போல் அம்பாள் குங்கும சுந்தரியும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் கி.பி 7 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பெருமையுடையது. திருஞானசம்மந்தர் இங்கு சில நாள் தங்கியிருந்து திருமூலநாதரை வணங்கி சென்றுள்ளார். தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் இத்தலம் பித்ரு சாப விமோட்சன ஸ்தலமரம் விளங்கி வருகிறது.

தகவல்: பா.இரமேஷ், லால்குடி
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 12 திருமுறைகள் புத்தகங்களை கொண்டு திருமுறை கோயில் இங்கு உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar