ஆண்டுதோறும் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப்பூசம் பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
சுற்றுவட்டார பகுதிகளில் சுப்ரமணியர் இந்த ஊரில் மட்டுமே தனிக்கோயிலாக இருப்பது தனிச்சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில்,
கிருஷ்ணாபுரம்,
விழுப்புரம்.
போன்:
+91 87602 60287
பொது தகவல்:
கிழக்கு திசை நோக்கி கோயில் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவக்கிரகம், நாகராஜர் சன்னதிகள் உள்ளது.
பிரார்த்தனை
திருமணத் தடை நீங்கவும், கிரக தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள் அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
வேலூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர் கிருஷ்ணதேவராயர். இவரது ஆட்சியில் இந்த ஊர் பாகை நகரம், கிஷ்ணபுரி என அழைக்கப்பட்டது. நாளடைவில் கிருஷ்ணாபுரம் என்று பெயர் மருவியது. இவரால் இந்த ஊரில் உற்சவர் சுப்ரமணிய சுவாமியை சத்ரு சம்ஹார சுப்ரமணியாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சுற்றுவட்டார பகுதிகளில் சுப்ரமணியர் இந்த ஊரில் மட்டுமே தனிக்கோயிலாக இருப்பது தனிச்சிறப்பாகும்.