காலை 7.00 முதல் 10.30 மணி வரை மாலை 5.00 முதல் 7.00 மணி வரை
முகவரி:
கருமாணிக்கப் பெருமாள் கோயில், சத்தரை கிராமம், புதுமாவிலங்கை வழி, கடம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் 631 203
போன்:
+91 89396 64897
பொது தகவல்:
சமஸ்கிருத உச்சரிப்பின் படி சத்தரை என்பதற்று நிழல், குடை என்ற பொருள் பட
ஏற்றவாறு, இவ்வூர் முழுவதும் மாந்தோப்பினால் சூழப்பட்டு, சூரிய கிரகணங்கள்
தரையில் படாதவாறு அடர்ந்த தோப்பாய் பரவியிருந்தது. வந்தாரை வாழவைத்து,
அவர்களின் விடாய் தீரும் வண்ணம் உணவளித்துப் பேணிப் பாதுகாக்கும்
க்ருஹங்களே அமைந்திருந்ததால், சத்தான பெரியோர் வாழும் இடம் என்ற பொருள்
படும்படி சத்தரை என்ற பெயர் அமைந்தது என்றும், உயர்ந்ததான சத்ரயாகம்
செய்யப்பெற்ற புண்ணிய பூமி ஆனதால் இவ்வூர் சத்தரை என்றும் பெயர் பெற்றதாக
வரலாறு. சத்தரை ஊரின் நடுவில் அமைந்துள்ளது இக்கோயில்.
பிரார்த்தனை
சனிக் கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் தீராத கடன் தொல்லைகள் நீங்கும்.
தலபெருமை:
சத்தரை கிராமம் வைஷ்ணவ குடும்பங்கள் பரவியிருந்து நில பலன்களுடன் மாட மாளிகைகளாக திகழ்ந்த க்ருஹங்கள் அமைத்து, பரந்த வசதிகளுடன் வாழ்ந்தனர். ப்ரஸித்த ஆசார்யர்கள் சிலர் இவ்வூர் ஸம்பந்தம் பெற்றவர்கள் என்ற பெருமை இந்த ஊருக்கு உண்டு.
கூபவதி மகத்துவம்: புராதன காலத்தில் போதாயன முனிவர் எழுந்தருளியிருந்தது தம்முடைய நித்ய கர்மானுஷ்டங்கனுக்களும், யாக யக்ஞங்கள் நடைபெற ஜலம் ஸம்ருத்தியாக இருக்க வேண்டும் என்று எம்பெருமானை ப்ரார்த்திக, கூபவதி என்ற இந்த நதியை ப்ரவஹித்துக் கொடுத்தார். வேண்டுமளவு வேண்டுமளவு இருத்தல் என்பதற்க்கு இணங்க இந்த நதி பலகாலம் வற்றாமல் ஓடிக் கொண்டிருந்தது. கூபவதியான முகத்வாரதம் சத்தரையில் தொடங்க, குஷஸ்தலை ஆற்றின் கிளையும் இவ்வூரில் வந்து சங்கமிக்கின்றது.
கூவம் நதி கூபம் என்னும் வடமொழிச்சொல் கிணறு அல்லது நிறைந்து இருத்தல் என்னும் பொருளை குறிக்கும் வண்ணம் இந்த நதி இக் கோயிலின் பின்புறம் தொடங்கி சுமார் 72 கி.மீ ஓடிச் சென்று சென்னையில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. குசஸ்தலை ஆற்றின் ஒரு கிளை கேசாவரம் தக்கோலத்தின் அருகே பிரிந்து, சத்தரையில் இந்த கூபவதி ஆற்றுடன் சங்கமிக்கின்றது. சுமார் 6000 ஏக்கர் நஞ்செய் மற்றும் புஞ்சை நிலங்களை பயிர் செழிக்கச் செய்து ஓடும் கூபவதி என்ற இந்நதி நாளடைவில் தன் சொல் மருவி கூவம் என்று அழைக்கப்படுகிறது. சத்தரை வைணவர்களின் கோத்ரம் * வைஷண்ர்வகள் கடைபற்ற வேண்டிய வைதிக நெறி வகைகளைச் சொல்லும் பல ஸூத்ரங்களில் முக்கியமான போதாயன முனிவர் திருவடி பதித்த இடமான சத்தரையில் உள்ள அனைத்து ஸுத்த்ரததததஸுத்ரத்தை வகுத்துக் வைஷணவர்களும் போதாயன ஸுத்ரத்தை சார்ந்து, கௌண்டின்ய கோத்ரத்தை தம் குலவழியாய் அடைந்து நின்றவரே... யுகத்தில் ஒரு உயிர் ஜனித்தது முதல் இறப்பு வரை கடைப்பிடித்து வரும் சடங்கு சம்பிரதாயங்கள் பல ரிஷிகளால் இயற்றி தொகுத்து வழங்கப்பட்டவை. அந்த ரிஷிகளில் சிறந்தவரான போதாயனர் என்னும் மகரிஷி மக்களின் நலத்திற்காக தவம் செய்து சிறந்த யாகம் நடத்த எண்ணினார். சத்தரையை முகத்துவாரமாக கொண்டு ஓடும் கூவம் நதிக்கரையில் சத்ரயாகம் என்னும் உயர்ந்த யாகத்தை நடத்தினார். போதயனரின் யாகம் செவ்வனே நடைபெற தேவையான நீர் வேண்டுமென இக் கோயிலில் உள்ள கருமாணிக்கபெருமாளை வேண்டி நிற்க, கூபவதி என்ற நதியினை பிரவாகித்து கொடுத்து அருளினார். பிரதி வருடம் சித்ரா பௌர்ணமி அன்று கூவம் ஆற்றில் இறங்கி உத்சவம் கண்டருளும் ஒரே பெருமாள் இவரே. இக்கோயில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளதால் வரும் பக்தர்கள் தன் நிலை மறந்து மனதார சிறந்த தியானத்தில் ஈடுபடுகின்றனர். இக்கோயிலில் தினப்படி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நாமக்கல்லில் காட்சி தருவது போல இராம பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூப ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேய உற்சவர் ஒரு குழந்தையை போல அழகாய் அமர்ந்துள்ளார். விஸ்வரூப ஆஞ்சநேய தரிசனம் சகல இடர்களையும் நீக்கி நன்மைகளை தரும்.
தல வரலாறு:
கூபவதி’ என்று பிரசித்தி பெற்ற கூவம் ஆற்றின் முகத்வாரத்தில் அøம்ந்துள்ள ‘சத்தரை’ என்ற க்ராமத்தில் நம்மாழ்வாரால் தம் திருவாய்மொழியில் பரக்கப் பாடிப் போந்த கமலவல்லி கநகவல்லி நாயிகா சமேத கருமாணிக்கப் பெருமாள், இனிய அமைதியான சூழலில் நல்ல கோயில் கொண்டு, பாங்காய் தம்மை நாடிவரும் பக்கதர்களின் ஆத்ம உஜ்ஜீவனத்திற்காக, கிழக்கே திருமுக மண்டலத்துடன் மனதை மயக்கும் பேரழகுடன் காட்சி தருகிறார். சுமார் 600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் கருவறையில் கருமாணிக்கப்பெருமாள் நின்ற திருக்கோலத்திலும், லக்ஷ்மி நரசிம்மர், கிருஷ்ணர், ஆண்டாள் மற்றும் சக்ரத்ழாவார் உற்ச்சவ மூர்த்திகளும் உள்ளன.
புராதன காலத்தில் கோயிலுக்கு மதிள் சுவர் இல்லாமல் , ப்ரதான சந்நிதி மட்டுமே இருக்க, பின்னர் இவ்வூரைச் சேர்ந்த சான்றோர்களால் மதிள்சுவர் மற்றும் திருமடைப்பள்ளி கட்டப் பெற்று, நித்ய ஆராதனங்கள் செவ்வனே நடைபெற பெருமாளுக்கு 9 ஏக்கர் விளைநிலமும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டு ப்ரக்ருதம் மத் ஆண்டவன் அத்யக்ஷத்தில் கோயில் அர்த்தமண்டபம் செப்பனிடப் பெற்று கர்பக்ருஹத்திற்க்கு மேல் விமானம் கட்டப் பெற்று, மஹா சம்ப்ரோக்ஷணமும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. பின்னர் 2014 ல் கோயில் முன் மண்டபம், அனுமன் சந்நிதி, கிணற்றுச் சுவர், திருமடைப்பள்ளி செப்பனிடுதல், கோயில் பராகாரத்தில் தரை அமைத்து பின்னர் ஸம்ப்ரோக்ஷணமும் நடத்தப்பட்டது.
இருப்பிடம் : சென்னை அரக்கோணம் இரயில் மார்க்கத்தில் கடம்பத்தூர் இரயில் நிலையத்தில் இறங்கி பேரம்பாக்கம் செல்லும் வழியில் 4 கி.மீ தொலைவில், பூந்தமல்லி * தண்டலம் வழியாக மப்பேடு வந்தும் அடையலாம்.