Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஐயப்பன், ஸ்படிக லிங்கேஸ்வரர்
  அம்மன்/தாயார்: கோட்டை பகவதி அம்மன்
  தல விருட்சம்: வில்வமரம் / வேப்ப மரம்
  தீர்த்தம்: கோட்டைக் குளம்
  ஆகமம்/பூஜை : தாந்திரீக முறைப்படி பூஜை
  புராண பெயர்: குடவூர் மடம் நம்பூதிரி பாட்
  ஊர்: திண்டுக்கல்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கார்த்திகை முதல் தேதி கொடியேற்றம் -பிரதி வருடம் டிசம்பர் 26 மண்டல பூஜை, டிசம்பர் 27 ரத ஊர்வலம் சபரிமலைக்கு நடை திறப்பு, மண்டல, மகர யாத்திரை அழைத்துச் செல்லல். கார்த்திகை மற்றும் மார்கழி முழுவதும் நித்திய பூஜை முடிந்து இரவு அன்னதானம் (தைமுதல் நாள் முதல் ஐப்பசி கடைசி நாள் வரை ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் பூஜை முடிந்து பிரசாதம் வழங்கல்) புரட்டாசி மாதம் நவராத்திரி காலங்களில் த்ரிகால பகவதி சேவை நடைபெற்று கன்னிகா பூஜை நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  தற்போது சபரிமலையில் உள்ள ஐயப்ப விக்ரகம், தமிழ்நாடு முழுவதும் பி.டி. ராஜன் தலைமையில் சுற்றி வந்தபோது திண்டுக்கல்லில் உள்ள இப்பிரார்த்தனை மண்டபத்தில் ஒரு நாள் முழுவதும் பக்தர்களால் பூஜித்து எடுத்துச் செல்லப்பட்டது சிறப்பு அம்சமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி காலை 7.00 மணி கணபதி ஹோமம் சிறப்பு அபிஷேகம் காலை 9.00 மணி உஷ பூஜை பகல் 11.00 மணி உச்ச பூஜை நண்பகல் 12.30 மணி நடை அடைப்பு பிற்பகல் 5.00 மணி நடை திறப்பு இரவு 8.00 மணி பஜனை இரவு 9.00 மணி அத்தாழ பூஜை இரவு 9.30 மணி அன்னதானம்10.00 ஹரிவராசனம் (தை முதல் நாள் முதல் ஐப்பசி கடைசி நாள் வரை) இரவு 7.30 மணி அபிஷேக ஆராதனை இரவு 8.30 மணி ஹரிவராசனம் 
   
முகவரி:
   
  ஐயப்பன் திருக்கோவில் திண்டுக்கல் வட்டார ஐய்பப பக்தர்கள் சங்கம் திண்டுக்கல் அறக்கட்டளை வட்டார ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள், 3-A மலையடிவாரம், ஆர்.வி.நகர், திண்டுக்கல் 624002 தொலைபேசி: +91 9578187773  
   
போன்:
   
  +91 +91 9790294405 +91 9944099722 
    
 பொது தகவல்:
     
  திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் இக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள கோயிலின் முன் விநாயகர் சன்னதி மத்தியிலும் மஞ்சள்மாதா, கருப்புசாமி சன்னதியும் இடதுபுறமும் நாகராஜா, கொச்சு கருத்த சுவாமி கோயில் சன்னதியும் வலதுபுறமும் அமைந்துள்ளது. பிரார்த்தனை மண்டபத்தின் முன் கோபுரத்தில் புலி வாகனங்கள் உள்ளது. உட்புறம் பிரார்த்தனை மண்டடபத்தில் ஐயப்ப சுவாமி தரிசனம் தருகிறார். இங்கு 500-க்கும் அதிகமானோர் அமர்ந்து ஐயப்பனை வழிபடலாம். இம்மண்டபத்தின் வலதுபுறம் அருள்மிகு ஸ்படிக லிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீ கோட்டை பகவதி அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் வலதுபுறம் விநாயகர் சன்னதி உள்ளது.
டிசம்பர் 26 அன்று மண்டலபூஜை முடிந்து ஆயிரக்கணக்கான நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  மாணவர்களின் கல்வி, குடும்பநலன், குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கம், தீராத நோய், தோஷங்கள் விலகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரசன்னம் பார்க்கப்படும். சோழி கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் திங்கள் தோறும் மாலை 7.00 மணிக்கு மிருத்ஞய ஹோமம், சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சுயம்வர புஷ்பாஞ்சலி செவ்வாய் தோறும் 7 வாரங்களில் நடைபெறும். விழாக்காலங்களில் சபரிமலையில் நிறைவுநாள் பூஜை செய்வது போல் இங்கும் 12 பாத்திரங்களில் வைத்து குருதி பூஜை நடைபெறுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  அன்னதானம் வழங்குவதற்கு தேவையான பொருள்கள் வழங்கல், பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானம் சென்று வருதல். 
    
 தலபெருமை:
     
  தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆன்மீக யாத்திரை செல்லும் பக்தர்கள் இங்கு வந்து இலவசமாக தங்கி ஐயனை தரிசிக்க செல்கின்றனர். (அடையாள அட்டை அவசியம் காண்பிக்க வேண்டும்) கோட்டை மாரியம்மன் திருவிழாவின் போது ஆராதானைகளை பக்தர்கள் இங்கிருந்து தீச்சட்டி எடுத்துச் சென்று அம்மனை வழிபடுகின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  இங்குள்ள பிரார்த்தனைமண்டபத்தை 1969-ல் திரு. ராஜகோபால் நாயுடு குருநாதர் (வாணக்காரசாமி) தலைமையிலான குழு அமைந்தது. 1969-ல் பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டு ஐயப்பனின் போட்டோ படம் வைத்து பூஜித்து வரப்பெற்றது. ஆண்டு தோறும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று 1999- கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் வசந்த மண்டபம், கலையரங்கம் கட்டப்பட்டு விநாயகருக்கென்று தனி சன்னிதானம் கட்டப்பட்டது. (கம்பத்தடி விநாயகர் சன்னதி மலேசியாவிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களால் கட்டி தரப்பட்டது).அதன் தொடர்ச்சியாக ஐயப்பனுக்கு சிலை வைத்து சன்னிதானம் அமைக்கப்பெற்று 21.08.2015 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் குடவூர் மட தந்திரிகளால் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு நாகராஜா நாக தேவதைகள் சக்தி அதிகமிருப்பதால் வசந்த மண்டபத்தில் அருள்மிகு ஸ்படிக லிங்கேஷ்வரர் மற்றும் ஸ்ரீ கோட்டை பகவதி அம்மன் சன்னதிகள் கட்டப்பட்டு 27.08.2017 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது அதிகரித்து தற்போது கார்த்திகை மார்கழி காலங்களிலும் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5- நாள்களில் இங்கிருந்து இருமுடி கட்டி சபரிமலை செல்கின்றனர். 2022- 23 ஆண்டில் ஆயிரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar