ஸ்ரீ மீனாட்சி கலை மற்றும் கலாச்சார மையம் இசை நிகழ்ச்சிகளை ஆலயத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதைத் தவிர, திருப்புகழ் மற்றும் கர்நாடக இசை வகுப்புகளும்
நடத்தப்படுகின்றன.உபநயனம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்து கொள்வதற்கு கல்யாண மண்டபம் வசதியுடன் அமைந்துள்ளது.
2007-ல் ஆலயத்தின் முதல் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இங்கு சுப்பிரமணியன், துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, ஐயப்பன், பாலாஜி மற்றும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இதனால், அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தெய்வங்களுக்கு தினசரி பூஜை செய்கிறார்கள்.
2021-ல் இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு முன்பாக கோடி அர்ச்சனை, 108 தம்பதி பூஜை, சுமங்கலி, மற்றும் வடு பூஜைகள் மிக சிறப்பாக நடத்தப்பட்டன.
கோவில் சிறப்பு; 2006 மார்ச் 6ம் தேதி நடைபெற்ற லட்சதீப நிகழ்ச்சியின் போது ஒரு பெண் குரங்கு (மந்தி) பூஜையில் கலந்து கொண்டது பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தது. நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடன் எழுந்தருளியிருப்பது, டெல்லியில் வேறு எந்த ஆலயத்திலும் காணக் கிடைக்காத பெருமை.
ஆண்டு செயல்பாடுகள்
ஆண்டு தோறும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், நவ சன்டி ஹோமம், விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, கந்த சஷ்டி, மஹா சிவராத்திரி, ஆடிப்பூரம்,
ஆண்டாள் திருக்கல்யாணம், சாஸ்தா மண்டல பூஜை, நவராத்திரி ஒன்பது நாட்களும் கலை, இலக்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தல வரலாறு:
டில்லியின் வடமேற்கு பகுதியான சாலிமார் பாக்கில் அமைந்துள்ளது அழகான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
இங்கு வேதங்களை பிரபலமாக்குவதற்காக வேதிக் சமாஜம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் சூரிய நமஸ்காரம் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறன்று உறுப்பினர்களின் கிரஹத்தில் நடத்தப்பட்டு வந்தது. அவர்களின் விடாமுயற்சியால் கோவில் கட்டுமான பணிகளுக்கு முன்பாக லட்சதீபம் மற்றும் கோடி அர்ச்சனை நடத்தப்பட்டன. 2003-ம் ஆண்டு பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ சக்தி கணபதி, ஸ்ரீ மீனாட்சி மற்றும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் உருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடன் எழுந்தருளியிருப்பது, டெல்லியில் வேறு எந்த ஆலயத்திலும் காணக் கிடைக்காத பெருமை.