Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முக்தீஸ்வரர், முக்தீஸ்வரமுடைய நாயனார்
  உற்சவர்: முக்தீஸ்வரர்
  அம்மன்/தாயார்: தர்ம சம்வர்தினி அம்பாள், அறம் வளர்த்த நாயகி
  தல விருட்சம்: மாமரம்
  தீர்த்தம்: கருட தீர்த்தம், நாக தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: பசி ஆற்றூர்
  ஊர்: ஆத்தூர்
  மாவட்டம்: செங்கல்பட்டு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசியில் பங்குனி மாதம் முதல்நாள் சூரிய பூஜை நடைபெறுவது சிறப்பு. சூரிய கதிர்கள் சில மணி துளிகள் லிங்க திருமேனியில் ஒளிர்வதை இன்றும் காணலாம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை மணி 5.00 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில், 37, அழகேசன் தெரு, வேதாச்சலம் நகர், ஜி.எஸ்.டி. ரோடு, ஆத்தூர், செங்கல்பட்டு  
   
போன்:
   
  +91 93811 86389, 0442 – 746 4325, 2746 3514 
    
 பொது தகவல்:
     
  கோப்பெருஞ்சிங்கன், தில்லை நடராஜர் மீது அதீத பக்தி கொண்டவன். அவர் குடியிருக்கும் கோயிலை விரிவுபடுத்த விரும்பியவன், அந்தப் பணிக்குப் பொருள் திரட்டும் விதம், தம் ஆட்சி எல்லைக்குட்பட்ட பிறபகுதிகளின் வருவாயை பொன்னம்பலத்துக்கு ஒதுக்கினான். அவ்வாறு தில்லை சபேசனின் திருப்பணிக்கு ஆற்றூா் கிராமத்து வருவாயையும் ஒதுக்கியுள்ளான். இச்செய்தி கல்வெட்டு சாசனமாய் ஆற்றூா் முக்தீஸ்வரா் கோயில் சுவா்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆற்றூா் கிராம வருவாயைக் கொண்டு, சிதம்பரம் கோயிலின் தெற்குக் கோபுரத்தை ஏழு நிலைக் கோபுரமாக திருப்பணி செய்து, அதற்கு சொக்கச்சீயன் திருநிலை என்ற திருநாமமும் இட்டான்.

'ஜயங்கொண்ட சோழமண்டல ஊற்றுக்காடு கோட்ட ஆற்றூா் நாட்டு ராஜராஜ நல்லூரான ஆற்றூா்' என்பது அக்காலத்தில் இத்தலத்தின் திருப்பெயராகும். கல்வெட்டுகளில் இத்தலத்தின் இறைவனுக்கு ஆளுடைய நாயனார் என்றும் முக்தீஸ்வரமுடைய நாயனார் என்றும் திருநாமங்கள் விளங்கியதை அறியமுடிகிறது. ஆற்றூருக்கு இராஜராஜ நல்லூா் என்ற பெயரும் சோழா்கள் காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமுக்தீஸ்வரரின் லிங்கத் திருமேனியின் பாணத்தில் சரிபாதியாக உள்ள நோ்கோடு ஈசனின் அா்த்தநாரீஸ்வரா் திருக்கோலத்தை வெளிப் படுத்துவதாக அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அருளும் இந்த ஈசன் சொர்ணரேகையுடன் அருள்பாலிப்பது அரிய தரிசனமாகும். ஆகவே, இவரை தரிசித்து வழிபடுவோரின் இல்லங்களில் செல்வம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை!


இத்திருத்தல பெருமான் பெயர் கொண்டு முன்பு முக்தீஸ்வரம் என்றும், பாலாற்றங்கரையில் உள்ளதால் நதிபுரம் என்றும், ராஜ ராஜ சோழன் காலத்தில் ராஜ ராஜ நல்லுார் என்றும், ஈசனின் கருணை வேண்டி இங்கு வீற்றிருக்கும் அம்பாள் இத்திருத்தலத்தில் பல காலம் தங்கி அனைவருடைய பசியைப் போக்க இங்கு அன்னக்கூடம் அமைத்து அனைவருக்கும் அன்னமிட்டு பசி ஆற்றியதால் இவ்வூருக்கு பசி ஆற்றுார் என்றும், அதுவே மறுவி தற்காலம் ஆத்துார் என்று இதுகாலம் வரை விளங்கும் அழகிய சிற்றுார்.


பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட உளிபடா திருமேனி பல முனிவர்களும், பல சித்தர்களும் பல அருளாளர்களும், ஆதி சங்கரரும், அப்பய தீட்சிதரும் பல காலம் இத்திருத்தலத்தில் தங்கி பல தொண்டுகள் புரிந்தும் காஞ்சி மஹா பெரியவர் பல நாட்கள் இத்திருத்தலத்தில் தங்கி சாதுர்மாசிய விரதம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்த அற்புத ஷேத்திரம்.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்கவும், மழலைப்பேறு வாய்க்கவும் கல்வியில் சிறந்து விளங்கவும் முக்தீஸ்வரப் பெருமானை நெய்தீபம் ஏற்றி வணங்குகின்றனா் 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் அணிவித்தும் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனா். 
    
 தலபெருமை:
     
  மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றினாலும் சிறப்புடைய அழகிய தொன்மையும் வளமுடைய அழகிய கிராமம்.
பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட உளிபடா திருமேனி பல முனிவர்களும், பல சித்தர்களும் பல அருளாளர்களும், ஆதி சங்கரரும், அப்பய தீட்ஷேந்திரரும் பல காலம் இத்திருத்தலத்தில் தங்கி பல தொண்டுகள் புரிந்தும் காஞ்சி மஹா பெரியவர் பல நாட்கள் இத்திருத்தலத்தில் தங்கி சாதுர்மாசிய விரதம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்த அற்புத ஷேத்திரம்.
 
     
  தல வரலாறு:
     
  இத்திருத்தல பெருமான் பெயர் கொண்டு முன்பு முக்தீஸ்வரம் என்றும், பாலாற்றங்கரையில் உள்ளதால் நதிபுரம் என்றும், ராஜ ராஜ சோழன் காலத்தில் ராஜ ராஜ நல்லுார் என்றும், ஈசனின் கருணை வேண்டி இங்கு வீற்றிருக்கும் அம்பாள் இத்திருத்தலத்தில் பல காலம் தங்கி அனைவருடைய பசியைப் போக்க இங்கு அன்னக்கூடம் அமைத்து அனைவருக்கும் அன்னமிட்டு பசி ஆற்றியதால் இவ்வூருக்கு பசி ஆற்றுார் என்றும், அதுவே மறுவி தற்காலம் ஆத்துார் என்று இதுகாலம் வரை விளங்கும் அழகிய சிற்றுார். பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட உளிபடா திருமேனி பல முனிவர்களும், பல சித்தர்களும் பல அருளாளர்களும், ஆதி சங்கரரும், அப்பய தீட்ஷேந்திரரும் பல காலம் இத்திருத்தலத்தில் தங்கி பல தொண்டுகள் புரிந்தும் காஞ்சி மஹா பெரியவர் பல நாட்கள் இத்திருத்தலத்தில் தங்கி சாதுர்மாசிய விரதம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்த அற்புத ஷேத்திரம்.

நம்முடைய துன்பத்தை நீக்கி ஞானமே வடிவமாகிய சிவ பரம பொருள் நம்மை கருவாகிப் பின் உருவாகிப் பிறவியில் உழன்று கொண்டிருக்கும் நாம் மீண்டும் கருவாகாமல் உருவாகாமல் இருக்க கருணைக் கொண்டு முக்தீஸ்வரர் என்றும் திருநாமம் கொண்டுள்ளார். முக்தி என்பது ஞானம் என்று பொருள்படும் இப்பெருமான் ஞானத்தை அருளும் சிறப்பினையுடைவர் ஞானம் என்பது அறிவு கலை எனவும் கொள்ளலாம்.

பராந்தக சோழரின் புதல்வரும் செம்பியன் மாதேவியின் கணவரும் கண்டராதித்தர் என்றும் அரசர், காஞ்சி மாநகரில் இருந்து மல்லை என்றும் மகாபலிபுரம் என்னும் இடம் செல்ல தன்னுடைய பரிவாரங்கள் உடன் பாலாற்றங்கரையின் மீது உள்ள அடர்ந்த வனப்பகுதியை கடக்க முற்படும்போது, இரவு ஆகிவிட்டதால் அந்த அடர்ந்த வனப் பகுதியில் தங்க வேண்டியதாயிற்று. தங்கியிருந்து அந்த இடத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஓசையுடன் கூடிய அற்புத ஒளி வருவதை கண்ட அரசன் அந்த இடம் நோக்கி செல்ல தன் பரிவாரங்களை அழைத்து வில்வ மரங்களும், மா மரங்களும் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியை சீர் அமைக்க செய்து, ஓசையுடன் கூடிய ஒளி வரும் இடம்நோக்கி சென்று, அந்த இடத்தில் புற்று ஒன்று இருப்பதை கண்டு தன் வாள் கொண்டு அந்த புற்றை வெட்டியபோது அழகிய சிவலிங்கம் சுயம்புவாய் காட்சி தந்தது. இத கண்ட மன்னன் அளவற்ற மகிழ்ச்சியினால் ஆனந்த கூத்தாடி அப்பெருமானுக்கு மஞ்சனம் செய்தபோது, எதிர்பாராத விதமாக புற்று அகற்றும்போது வாள் லிங்கத்தின் மேல் பட்டு வெட்டுப்பட்டது. வெட்டுபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டு வருவதை கண்டு மன்னன் பதைபதைத்து, அஞ்சி பெருமானிடம் தொழுது மன்னித்தருள வேண்டி இதற்கு பெருமானும் இசைந்து வில்வ பத்திரம் கொண்டு வெட்டப்பட்ட இடத்தில் வைத்து பூஜித்தால் திருமேனியில் உள்ள காயங்கள் அகன்றுவிடும் என்று கூற அதன்படியே அரசனும் பூஜை செய்ய அவரும் அகம் மகிழ்ந்து அன்பு கொண்டார். இத்திருத்தல திருமேனியில் மேல் வாள் கொண்டு வெட்டப்பட்ட சில வடு இருப்பதை இன்றும் காணலாம். இதைதொடர்ந்து அந்த அடர்ந்த வனம் உள்ளே தங்கி இப்பெருமானுக்கு ஓர் கோயில் அமைக்க எண்ணம் கொண்டு திருப்பணிகள் தொடர்ந்தான்.

இதன் முன்னரே நாகனும், கருடனும் சேர்ந்து பல காலம் இப்பெருமானை பூஜித்து வந்ததும், தற்போது கோயில் அமைத்தால் பூஜைகள் தடைபடுமே என்று எண்ணி இப்பெருமானிடம் வேண்டி நின்றனர். இதற்கு பெருமானும் இசைந்து நீங்கள் மீண்டும் மானிட பிறப்பு எடுத்து இந்த கோயில் பூஜையை கிரமமாக தொடர்ந்து செய்யும்படி வான் வழியே அருளினார். இதன்பின் அத்தருணம் வரும் வரை இப்பெருமானை பூஜித்து மானிட பிறப்பு எய்தினர். இருவரும் பருவம் எய்தும் வரை இத்திருப்பணி தடைப்பட்ட இவர்கள் வந்த பின் மீண்டும் திருப்பணிகள் நிறைவு பெற்று பூஜைகள் பல காலம் செய்வித்து சிவலோகம் அடைந்தனர் என்பது புராணம்.

கருடன் திருக்கோயில் முன்பு திருக்குளம் அமைத்து கருடதீர்த்தம் எனவும் திருக்கோயில்களுக்கு சற்று துாரத்தில் நாகராஜன் குளம் அமைத்து நாக தீர்த்தம் (தற்காலம் இது ஏரியாக உள்ளது) அமைய பெற்ற உள்ளதை இன்றும் காணலாம். நாகராஜனும், கருடனும் பகைமை பாராட்டாது, இப்பெருமானை சேர்ந்து வழிப்பட்டதால் இத்திருத்தல பெருமானை வழிப்படுபவர் பகைவர் தொல்லை இருக்காது என்று அன்று முதல் பல அரசர்கள் இப்பெருமானை வழிப்பட்டு பகைமையின்று வாழ்ந்தனர்.

பழமையும், பாரம்பரியமும் கொண்ட இத்திருக்கோயிலில் ஆங்காங்கு நந்திகள் கொண்ட நீண்ட மதில் சூழ தெற்கு பார்த்த தோரண வாயில், கம்பீரமாக தோற்றம் அளிக்கும். இந்த வாயில் மேல் சிறிய கோபுர அமைப்புடன் அமையப்பெற்ற கயிலைநாதர் காட்சி மிக அழகாய் அமைந்திருப்பது மனதிற்கு நிறைவு. அதன் மேல் 5 கலசங்கள் உடன் சிறிய கோபுரமாய் சாலாகரம் நுழைவு வாயில் இடதுபுற துவார கணபதியும் வலதுபுறம் துவார முருகன் மிக நேர்த்தியாக காட்சி தருகின்றனர். இத்திருக்கோயிலை காத்து நிற்கும் இத்தெய்வங்களே இவ்வளவு அழகு என்றால் உள்ளே உலகை காத்து ரட்சிக்கும் பரம்பொருள் எப்படி அழகுடன் வீற்றிருப்பார் என்ற வியப்பில் நம்மை உள்ளே அழைத்து செல்கிறது.

சுவாமியின் மேல் விமானத்தின் உள்புற அமைப்பு மகாமேரு போன்ற அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் விளங்கும் இந்த விமானத்தின் ஆற்றல் மூலம் பலவிதமான சக்திகளுடன் நல்ல அதிர்வுகள் நாம் உணர முடிகின்றது என்பது நிதர்சனமான உண்மை. ஜீவ அணுக்கள் குறைபாடு காரணமாக மழலைப் பேறு இன்றி வருந்தும் அன்பா்கள், அந்தக் குறை நீங்க முக்தீஸ்வரரை வழிபடுகின்றனா். நாகராஜனும், கருடனும் இத்தலத்தில் வழிபட்டு பகையின்றி வாழ்ந்ததாக தலபுராணம் சொல்கிறது. ஆக, இத்தல ஈசனை வழிபாடு செய்ய ஜன்ம விரோதியும் நண்பா்களாக மாறுவர்களாம்.

இத்திருத்தலத்தின் வடக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அருள்பாலிக்கின்றாள் அம்பிகை தா்மசம்வா்த்தினி. அழகுத் தமிழில் அம்பிகையின் திருநாமம் அறம்வளா்த்த நாயகி ஆகும். 32 வகையான அறங்கள் செழிக்க, இத்தலத்தில் ஈசனைக் குறித்து தவம் செய்தாள் அம்பிகை. அப்போது ஆயிரம் அந்தணா்களுக்கு அன்னமிட எண்ணினாள். எண்ணிக்கையில் ஒருவர் குறைய, ஈசனே அம்பாளின் திருக்கரத்தால் உணவருந்தி அம்பிகைக்கு அருள்புரிந்தாராம்! வெள்ளிக்கிழமைகளில் அன்னையின் திருமாங்கல்ய தரிசனத்தை தரிசித்தால், மணமாகாத மங்கையருக்கு திருமணத் தடைகள் நீங்கி, மனம் போல மணவாழ்க்கை ஏற்படும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருக்கோயிலின் உள்ளே நுழையும் போதே கிழக்கு நோக்கியபடி ஸ்ரீவாராஹி அம்மன் சந்நிதி உள்ளது. இந்த தேவியை வழிபட்டால், நிலம் தொடா்பான பிரச்சனைகள் மற்றும் வழக்குகள் சாதகமாக முடியும் என்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள். இந்த அம்மனுக்கு அமாவாசை அன்று மாலையில் விசேஷ ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு கண்டெடுக்கப்பட்ட ஜேஷ்டா தேவியின் அரிய சிற்பம் நான்கு திருக்கரங்களோடு சிற்பக்கலை நுணுக்கங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் இந்த அன்னை மாந்தி தோஷம் நீக்கும் சக்தியாக வணங்கப்படுகிறாள். ஆலயத்தின் தேவ கோட்டத்தில் விநாயகா், தட்சிணாமூா்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் துா்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனா். வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் விஷ்ணு துா்கை திருவுருவச் சிலை வனப்பின் உச்சமாகும். சற்றே சாய்ந்த நிலையில், இடது திருக்கரத்தைத் தொடையில் ஊன்றி, வலது திருக்கரம் அபயமளிக்க, பின்னிரு திருக் கரங்களில் சங்கு - சக்கரம் ஏந்தியபடி அருளும் அன்னையின் அழகினைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். ஸ்ரீதட்சிணாமூா்த்திக்கு அருகில் ஒரு பாதாள அறை சிமெண்ட் பலகையால் மூடப்பட்டுள்ளது.

போர்க்காலங்களில் மறைந்திருந்து தாக்குதல் நடத்த இந்தப் பதுங்கு குழி பயன்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. திருக்கோயிலின் பிராகாரத்தின் வட கிழக்கு மூலையில் உள்ள மண்டபத்தில் நான்கு லிங்கத் திருமேனிகள் உள்ளன. இவற்றில் இரண்டு லிங்கங்களில் ஆவுடையார் இன்றி பாணம் மட்டுமே காணப்படுகிறது. இந்தத் தலத்தில் நடைபெற்ற அகழ்வாய்வின் போது இந்த லிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன என்று அறியமுடிகிறது. திருவண்ணாமலையில் அருள்பாலிப்பது போல திசைக்கு ஒன்றாக அஷ்டலிங்கங்கள் இங்கு அருள் பாலித்ததாகவும் கால வெள்ளத்தில் மற்றவை மறைந்துபோக, இந்த நான்கு லிங்கங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் இத்தல அன்பா்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஸ்ரீமுக்தீஸ்வரரின் லிங்கத் திருமேனியின் பாணத்தில் சரிபாதியாக உள்ள நோ்கோடு ஈசனின் அா்த்தநாரீஸ்வரா் திருக்கோலத்தை வெளிப் படுத்துவதாக அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அருளும் இந்த ஈசன் சொர்ணரேகையுடன் அருள்பாலிப்பது அரிய தரிசனமாகும்
 
     
பகிர்க copied
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar