பதிவு செய்த நாள்
19
டிச
2019
02:12
பெண்ணாடம்: மார்கழி மாதம் துவங்கியதையொட்டி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை உற்சவம் துவங்கியது.குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் பக்தர்கள் எழுந்து நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவதும்; சிலர் குழுக்களாக இணைந்து பஜனை பாடல்களை வீதிகளில் பாடிச்செல்வதும் வழக்கம்.
அதன்படி, மார்கழி மாதம் முதல் நாளான நேற்று முன்தினம் (டிசம்., 17ல்) பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.இதையொட்டி, நேற்று 18ம் தேதி காலை 5:30 மணியளவில் ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமாதேவி சமேத வேதநாராயண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்; காலை 6:15 மணியளவில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் திருப் பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடி, கோவில் பிரகாரத்தை வலம் வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.