பதிவு செய்த நாள்
19
டிச
2019
02:12
சென்னை:மாங்காடு, காமாட்சியம்மன் கோவிலில், பாவை விழா துவங்கப்பட்டுள்ளது.மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, மார்கழி மாத இசை விழாவை, பாவை விழா எனும் பெயரில் துவக்கி உள்ளது.
பள்ளி மாணவ - மாணவியர் மார்கழி மாத பெருமை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை, ஆன்மிக அறிஞர்கள் மூலம் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.ஜன., 2ம் தேதி, அது குறித்த ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துஉள்ளனர்.