கடலுார்: கடலுார் வீரஆஞ்சநேயசுவாமி கோவில் வரும் 25ம் தேதி அனுமத் ஜெயந்தி உற்சவம் நடக்கிறது.கடலுார் வீரஆஞ்சநேயசுவாமி கோவிலில் வரும் 25ம் தேதி அனுமத் ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. இதையொட்டி வரும் 25ம் தேதி காலை 10:30 மணிக்கு மூலவர், உற்சவம் திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் திருவீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செயலர் அலுவலர் மதனா, தக்கார் முத்துலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.