புவனகிரி: கீழ் புவனகிரி சின்னப்பா வீதியில் ஸ்ரீ நன்னைய ராமானுஜ கூடத்தில் மார்கழி மாத திருப்பாவை உபன்யாசம் துவங்கியது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார்கள், திவ்ய பிரபந்தம் பிரசாரஅமைப்பு திருப்பாவை உபன்யாசத்தை நாடெங்கும் 243 இடங்களிலும், தமிழகத்தில் 89 இடங்களிலும் துவக்கியது.
புவனகிரி ராமானுஜ கலாசார மையத்தில் முப்பது நாளும் நடப்பதற்கு ஏற்பாடு துவக்கினர். பாகவதர் அமைப்புத்தலைவர் ராஜமோகன் ராமானுஜதாசர் தலைமை தாங்கினார். ஸ்ரீ நன்னைய ராமானுஜ கூட்டத்தின் பொறுப்பாளர் பூவராக ராமானுஜதாசர் முன்னிலை வகித்தார். வைணவரத்னா பேராசிரியர் கோகுலாச்சாரி முதல் பாசுரத்தின் பாடலைப்பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மார்கழி மாதம் முப்பது நாட்களும் காலை ஏழு மணிக்கு இந்த உபன்யாசம் நடைபெறுகிறது. உபன்யாசத்தில் ஏராளமான அன்பர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.ஏற்பாட்டினை ராமானுஜ கலாச்சார மையத்தின் செயலாளர் முனைவர் ஸ்ரீராம் செய்து வருகிறார். ஜனவரி 14 தேதிவரை நடை பெறும். ஜனவரி 14 ம் தேதி மாலை ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.