Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை வெள்ளகோவில் கடைவீதியில் ஐயப்ப சுவாமி நகர்வலம் வெள்ளகோவில் கடைவீதியில் ஐயப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் காலபைரவ அஷ்டமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் காலபைரவ அஷ்டமி விழா

பதிவு செய்த நாள்

20 டிச
2019
12:12

பரமக்குடி: பரமக்குடியில் சிவன் கோயில்களில் கால பைரவ அஷ்டமி விழாவையொட்டி, சிவபெருமான் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியருளிய லீலை நடந்தது. பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு துவங்கி ேஹாமங்கள், பூர்ணாகுதி நிறைவடைந்து மூலவர் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பாளுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் மற்றும் பல அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் முடிந்து மகா தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி தனித்தேரிலும் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளினர். விநாயகர் மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை முன் செல்ல பஞ்சமூர்த்திகள் வீதிவலம் வந்தனர். பின் மாலை 5:00 மணிக்கு ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை அபிஷேகங்கள் நிறைவடைந்து, சுவாமி, மீனாட்சி அம்மன் தனித்தனியாக ரிஷப வாகனத்தில் புஷ்ப சப்பரத்தில் வீதிவலம் வந்தனர். பக்தர்கள் ஹர, ஹர, சிவ, சிவ கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது சுவாமி சென்ற தெருக்களில் சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்த லீலையை நினைவூட்டும் விதமாக பலரும் தேங்காய் உடைத்து, பிரசாதம் வழங்கினர்.

* எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் அபிஷேகத்திற்குப் பின் சுவாமி, அம்பாள்
வீதிவலம் வந்தனர்.

சாயல்குடி: -சாயல்குடி அருகே மாரியூரில் உள்ள பூவேந்திய நாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் மூலவர் பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் நெய் விளக்கேற்றினர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான  பக்தர்கள் வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar