திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி பாலமணிகண்டன் சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி பாலமணிகண்டன் சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 9:00 மணிக்கு தென்பெண்ணையாற்றில் கலசம் புறப்பாடாகி, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், துர்கா ஹோமம், மகாசாஸ்தா ஹோமம், சடாசர ஹோமம், சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு திருவாபரணம் புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.