செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2019 11:12
செஞ்சி: செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு நேற்று செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகமும், அரச இலையில் அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை சென்னையை சேர்ந்த செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் சாரிட்டபிள் டிரஸ்ட் குழுவினர் செய்திருந்தனர்.
திருவத்திமலை: செஞ்சியை அடுத்த மேல் தாங்கள் திருவத்திமலையிலுள்ள உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி திருக்கோவிலில் உள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடந்தது. வடைமாலை சாற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக அனுமன் ஜெயந்தி முன்னிட்டு விசேஷ திருப்பதி பெருமாள் சேவகர் சுவாமி தலைமையில் சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது.