பதிவு செய்த நாள்
31
டிச
2019
02:12
சென்னை: குரோம்பேட்டை, நியூ காலனியில் உள்ள, சுந்தர விநாயகர் கோவிலில், 45வது புத்தாண்டு பூஜைகள் நடக்க உள்ளன.குரோம்பேட்டை, நியூ காலனியில் உள்ள, சுந்தர விநாய கர் கோவிலில், அய்யப்பன், காசி விஸ்வநாதர், ராமர், லட்சுமணர், ராகவேந்திரா, ஷீரடி பாபா, விசாலாட்சி அம்மன், ஈஸ்வரன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சுவாமிகளுக்கு, பாலாபிஷே கம் செய்வதற்காகவே, 20 பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.
இங்கு வழங்கப்படும் அன்னதானத்தால், 100 பேர் வரை, தினமும் பசியாறுகின்றனர். இவ்வளவு சிறப்பு மிக்க கோவிலில் அமைந்துள்ள, அய்யப்பனுக்கு இன்று (டிசம்., 31) மாலை, 6:00 மணி க்கு, வீரமணிராஜு வழங்கும் இறை இசை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படும்.
அய்யப்பனுக்கு, ஜனவரி 1ம் தேதி, புத்தாண்டு பூஜை நடக்க உள்ளது. காலை, 5:30 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கி, 8:00 மணி முதல், ஏகாதச ருத்ரஜபம், மஹாபிஷேகம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனைகள் நடைபெற உள்ளன. மதியம், 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.இந்த, 45ம் புத்தாண்டு பூஜைகளுக்கான ஏற்பாடு களை, சுந்தர விநாயகர் அடியார்கள் சங்கம் செய்துள்ளது.