பதிவு செய்த நாள்
31
டிச
2019
02:12
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, தனியார் விடுதிகள் அதிகரித்துள்ளன.திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது.
இங்குள்ள மூலவர் கந்தசுவாமி, மும்மூர்த்தி அம்சமாக, சுயம்புமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.திருமணம், வழக்கில் வெற்றி பெறுதல், குழந்தை பேறுக்காக, இங்குள்ள இயந்திர முருகன் ஸ்ரீசக்ரத்தை, ஏராளமானோர் வழிபடுகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளிமாவட்ட பக்தர்கள், இரவு தங்கி, மறுநாள் காலை, கந்தனை வழிபடுவதற்கு வசதி இல்லாமல் இருந்து வந்தது.இந்நிலையில், இங்கு வெளியூர், வெளிமாவட்ட பக்தர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன், தனியார் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு, 1,000 முதல், 3,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.