திண்டிவனம் அருகே பொங்கல் பண்டிகை மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2019 02:12
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பொங்கல் பண்டியை முன்னிட்டு மண்பானை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பண்டிகையை முன்னிட்டு, திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் மண்பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டியுள்ளனர். இப்பகுதியில் தயாரிக்கப்படும் மண் பானைகள், புதுச்சேரி, விழுப்புரம், கடலுார் மட்டுமின்றி, சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இது குறித்து மண்பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மண்பானை தயாரிக்கும் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக இந்த தொழிலில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே நாங்கள் வருவாய் பார்க்க முடியும். அதுவும் ஒரு பொங்கல் பானை 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். எங்களிடம் வியாபாரிகளே நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர் என்றனர்.