பதிவு செய்த நாள்
10
பிப்
2020
11:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், தைப்பூச திருத்தேர் நிலையடைந்தது. முக்கிய விழாவான மகா தரிசனம், 12ம் தேதி நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற கோவிலான, சென்னிமலை மலை முருகன் கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழா தேரோட்டம், நேற்று முன்தினம் காலை நடந்தது. மாலையில் மீண்டும் இழுக்கப்பட்டு, வடக்கு ராஜவீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, 5:56 மணிக்கு நிலை தேர்ந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றிரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது. நாளை இரவு தெப்போற்சவம் பூதவாகனக்காட்சி நடக்கிறது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான, மகா தரிசனம், 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில் வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு, சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு நடராஜ பெருமான், சுப்பிரமணிய சுவாமி முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில், திருவீதி உலா செல்வர். இந்நிகழ்வு இரவு முழுவுதும் நடக்கும். இதை காண சென்னிமலை நகரில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். வியாழன் அதிகாலை, 5:00 மணிவரை சுவாமி திருவீதி நடக்கும். 13ம் தேதி இரவு,. 7:00 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.