ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. மார்கழி மாதம், 27ம் நாள் பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண்டாள் அரங்கநாதர் நாளாகும். ஊட்டி வேணுகோபாலசுவாமி கோவிலில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாலை, 6:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஹோமம் அடுத்து கூடார வல்லி நிகழ்ச்சி நடந்தது. திருப்பாவை பாடப்பட்டு, பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் விஸ்வநாத் ஆனந்த், முராஹரி, ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.