நாகர்கோவில் : சாமிதோப்பு ஐயா வைகுண்டரின் தலைமை பதியில் ஐந்து பேருடன் வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி திருவிழா 11 நாட்கள் நடக்கும். நேற்று கொடியேற்றம் நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்து, 6:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சியில் ஐந்து பேர் மட்டும் கலந்து கொண்டனர். கோயிலின் வெளியே இடைவெளி விட்டு நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர். பக்தர்கள் கூடும் தேரோட்டம், கலிவேட்டை நடைபெறுமா என தெரிவிக்கப்படவில்லை.