கடலாடி : மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் நடந்தது. ஆவாரங்காடு காளியம்மன் கோயிலில் பெண்கள் மற்றும் பெண் வாரிசுதாரர்கள் ஒவ்வொரு குடும்பமாக கோயிலுக்கு வந்து முட்டையிட்ட கோழிகளை பலியிட்டு அவற்றை கோயில் வளாகத்திலேயே சமைத்து காளிக்கு படையலிட்டு அவற்றை பெண்களே சாப்பிட்டனர். மீதமானவற்றை வேறு யாருக்கும் கொடுக்காமல் குழி தோண்டி புதைத்தனர்.மேலும் புதுநெல் அரிசியில் சமையலிடுவதாகவும், சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடையில் இருந்து நேரடியாக கோயிலுக்கு வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர். காலம் காலமாக தொடரும் இந்த விநோத வழிபாட்டால் மழை பெய்து விவசாயம் செழிப்பதாக தெரிவித்தனர்.