ராஜபாளையம்: ராஜபாளையம் பெரிய கடை பஜார் செல்வ விநாயகர் கோயிலில் அன்னதான பிரபு ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் கன்னி பூஜை மற்றும் அன்னதான விழா நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம், வீதி உலா நடந்தது. மதியம் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5:00 மணிக்கு கன்னி பூஜை , இரவு அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செல்வவிநாயகர் அன்னதான பிரபு ஐயப்ப பக்தர்கள் குழு, இல்லத்து பிள்ளைமார் இளைஞர் சங்கம், சிவ அருள் ஜோதி டிரஸ்ட் சதுரகிரி அமைப்பினர் செய்திருந்தனர்.