Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: சித்திரை மாத ராசிபலன் மகரம்: சித்திரை மாத ராசிபலன் மீனம்: சித்திரை மாத ராசிபலன் மீனம்: சித்திரை மாத ராசிபலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பம்: சித்திரை மாத ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
23:57

அவிட்டம் 3, 4 பாதங்கள்:

எதிராளிகளை சமாளிக்கும் திறன் உடைய அவிட்டம் 3, 4 நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரவு திருப்திகரமாக இருக் கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத் தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்ச லுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும். பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்:  நரசிம்மர்
சந்திராஷ்டமம்: ஏப்ரல் 23
அதிர்ஷ்டம்: மே 09

சதயம்:

மன வலிமை அதிகம் உடைய சதயம் நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வ தில் உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர் கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்ச லாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். கலைத்துறையினருக்கு சந்தோஷமான மனநிலை இருக்கும். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்:  மாரியம்மன்
சந்திராஷ்டமம்: ஏப்ரல் 24, 25
அதிர்ஷ்டம்: மே 10, 11

பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:

காலம் தாழ்த்தினாலும் சிறப்பான காரியங்களைச் செய்யும் பூரட்டாதி - 1, 2, 3 நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்கு றுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.  தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தா லும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப் பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. வழக்கு விவகாரங்களில்  ஈடு படாமல்  தவிர்ப்பது நல்லது.  பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். கலைத்துறையினர் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவரவு தாமதப்படலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம்:  சிவன்
சந்திராஷ்டமம்: ஏப்ரல் 25, 26
அதிர்ஷ்டம்: மே 11, 12

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று ... மேலும்
 
temple
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ளது புலியூரான் கிராமம். இங்கு ஒரு பழைய கால சிற்பம் ... மேலும்
 
temple
 நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை ... மேலும்
 
temple
காலடி: கேரளா எர்ணாகுளம் அருகிலுள்ள காலடியில் ஆதிசங்கரர் அவதரித்தார். இங்கு திருக்காலடியப்பன் என்ற ... மேலும்
 
temple
உடுமலை:குடிமங்கலம் பகுதியில், பராமரிப்பில்லாமல், அழிந்து வரும், வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.