கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்கள்.* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் துன்பம் இதயத்தை வலிமையாக்குகிறது.* முட்டாள் எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான். புத்திசாலி விலகியே இருப்பான்.* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.* புற்றை உடைப்பவர் பாம்பால் கடிபடுவது போல, பிறருக்காக படுகுழி தோண்டுபர் அந்தக் குழிக்குள் விழுவார்.* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனம்.* வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் ஏதுமில்லை. * சுதந்திரமாக இருக்க விரும்பினால் உண்மையைப் பேசுங்கள். புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். * பிறருடன் சண்டையிட்டு தன் மேன்மையை குறைத்துக் கொள்பவன் புத்திசாலி அல்ல.* முட்டாளின் வழி அவனது பார்வையில் நன்றாகத் தான் தோன்றும். ஆலோசனைக்கு செவி கொடுப்பவனே வெற்றி பெறுவான். – பொன்மொழிகள்