மண்டைக்காடு கோயில் தீ விபத்து: விசாரணைக்குழு அமைக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2021 03:06
திருநெல்வேலி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில செய்தித் தொடர்பாளர் சுந்தர வடிவேல், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு:மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து நடந்த பின்பு கோயில் நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டிய தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதை மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தீ விபத்து காட்டுகிறது.௨௦௧௬ம் ஆண்டு முதல் ௧௦க்கும் மேற்பட்ட தேர் தீ விபத்து, கோயில் தீ விபத்துகள், நகை , சிலை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. மண்டைக்காடு கோயில் தீ விபத்து தொடர்பாக விசாரணைக்குழு அமைக்க வேண்டும். தீ விபத்துக்கு காரணமான கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீ விபத்து புனரமைப்பு பணிகளை அரசு செலவில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.