வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. ஜூன்.,7 இரவு 8 மணிக்கு கோயில் நிறுவனர் கோபிநாத் பூஜைகளை முடித்து விட்டு சென்றார். இக்கோயில் வளாக அறையில் துரங்கிய பூஜாரி அதிகாலை 3:00 மணிக்கு பார்த்தபோது தனி பிரகார கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 3 மற்றும் 1 அடி நடராஜர் சிலைகள், இரண்டரை அடி சிவகாமி, ஒன்றரை அடி மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் திருடு போனது தெரிந்தது. இரவு 11மணிக்கு கோயில் பின்பக்க சுற்றுசுவரில் ஏறிகுதித்த மர்ம நபர்கள் சிலைகளை திருடியது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. கிராம சாலைகளில் உள்ள போலீசாரின் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் சிலைகளை வயல் வழியாக எடுத்து சென்றுள்ளனர். சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., மலைச்சாமி தலைமையிலான போலீசார் நேரில் விசாரித்தனர்.