பூரி ஜெகந்நாதர் கோவிலில் தேர்கள் புதுப்பிக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2021 10:06
பூரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, மூன்று தேர்கள் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.
ஒரிசாவின் கடற்கரை நகரான புரியில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் ஆண்டு உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான புகழ்பெற்ற தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் நடைபெறும். இந்நிலையில் தேரோட்டத்தை நடத்துவதற்காக கோயில் நிர்வாக கமிட்டி எடுத்துள்ள முடிவின் படி முதல் கட்டமாக பூஜை, நிகழ்ச்சிகளுடன் மூன்று தேர்களையும் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.