பதிவு செய்த நாள்
14
ஆக
2021
04:08
புட்லுார்: அம்மன் கோவில்களில், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் குவியும். அதிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தர்கள் பொங்கலிட்டு, அம்மனை வழிபடுவர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக அரசு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளது.அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட கோவில்களில், பக்தர்கள் தரிசனம் நேற்று ரத்து செய்யப்பட்டது.எனினும், கொரோனா பரவலை கண்டுகொள்ளாமல், திருவள்ளூர் புட்லுார் அங்காளம்மன் கோவிலில், நுழைவாயில் முன், பக்தர்கள் சூடம் ஏற்றி, அம்மனை வழிபட்டு சென்றனர்.