Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி ஞாயிறு வழிபடும் முறையும் ... இழந்த பணத்தை பெற...
முதல் பக்கம் » துளிகள்
ரக்ஷாபந்தன்: சகோதரத் திருநாள் கொண்டாடுவோமா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரக்ஷாபந்தன்: சகோதரத் திருநாள் கொண்டாடுவோமா!

பதிவு செய்த நாள்

22 ஆக
2021
02:08

சில வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம். தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர். தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு "சந்தோஷி என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது.

இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு "ராக்கி என்னும் கயிறு கட்டுவார்கள். "ரக்ஷாஎன்றால் "பாதுகாப்பு தரும் கயிறு. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்று சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம். ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார். மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு. கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை கொண்டாடி மகிழ்வோம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar