ஒருவர் வெயிலில் துாங்கி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற விறகு வெட்டி ஒருவர், படுத்திருப்பவரை பார்த்து ‘கடுமையான உழைப்பாளியாக இருப்பார்போல’ என எண்ணினார். அந்த வழியாக வந்த திருடன் அவரை பார்த்து, ‘நம்மை போல இரவு முழுவதும் திருடி இருக்கிறான்போல’ என எண்ணினான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அவரை பார்த்ததும், ‘காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது’ என நினைத்தான். பார்த்தீர்களா... ஒவ்வொருவரும் அவரவர் பார்த்த கோணத்தை வைத்தே பிறரை மதிப்பிடுகின்றனர். கண்ணோடு காண்பதெல்லாம் பொய்யாகதான் இருக்கும். தீர விசாரித்தால்தான் உண்மை புரியும்.