Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : புரட்டாசி ராசிபலன் கும்பம் : புரட்டாசி ராசிபலன் கும்பம் : புரட்டாசி ராசிபலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மகரம் : புரட்டாசி ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம் : புரட்டாசி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 செப்
2021
03:09

உத்திராடம் - 2, 3, 4:
முக்கிய பிரமுகர்களின் ஆதரவு பெற்ற உத்திராட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். உத்தியோகஸ்தர்கள் தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்கள் தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். அரசியல்வாதிகள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர்.

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவது நல்லது. மது மாமிசத்தை அறவே விட வேண்டும்.
சந்திராஷ்டமம்: அக். 2
அதிர்ஷ்ட நாள்: செப் 24, 25

திருவோணம்:
உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உடைய திருவோண நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபவிஷயயங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 3
அதிர்ஷ்ட நாள்: செப் 25, 26

அவிட்டம் - 1, 2:
மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய அவிட்ட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசியில் குரு இருப்பதன் மூலம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். பணியில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபவிஷயயங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்.

பரிகாரம்: பிரதோஷ வேளையில் சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: அக். 4
அதிர்ஷ்ட நாள்: செப் 25, 26

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar