Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியீடு திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் ... வாராகி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலிப்பு வாராகி அலங்காரத்தில் சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆசை ஆசையாய் இருக்கிறதே.. உங்களை பார்த்திடவே
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
10:30

எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகி விடுகிறது... எந்த கோயிலுக்கு போனாலும் நிம்மதி இல்லை... எல்லா பரிகாரமும் செய்துவிட்டேன்... திருமணமாகி பல ஆண்டுகளாகி விட்டது இன்னமும் குழந்தை இல்லை....இன்னும் என் வாரிசுக்கு திருமணம் கைகூடவில்லை... இது இன்று பல குடும்பங்களிலும் பேசப்படும் வார்த்தைகள். இதற்கு என்ன காரணம். எந்த பரிகாரமும் செல்லுபடியாகவில்லை என்றால் அது கண்டிப்பாக முன்னோர் வினையாகத்தான் இருக்கும். என்ன பரிகாரம் செய்தாலும், இறந்துபோன முன்னோருக்கு செய்ய வேண்டிய காரியங்களை முறையாக செய்யாவிட்டால் பலன் கிடைக்காது.

இதற்கு என்ன செய்யலாம்...அதற்கான முக்கிய காலம் தான் இந்த மகாளய பட்சம். புரட்டாசி தேய்பிறை பிரதமையில் துவங்கி அமாவாசையுடன் முடியும் 15 நாட்களே (செப்.21 - அக்.6) மகாளய பட்சம் எனப்படுகிறது. குழந்தைகளுக்கு தேர்வுகால விடுமுறை போல இந்த மகாளய பட்ச நாட்கள்தான் முன்னோருக்கு விடுமுறைக்காலம். . அவர்களுக்கு விடுமுறை அளித்து எங்கு வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என அனுப்புகிறார் யமதர்மர். விடுமுறைக்கு அவர்கள் எங்கே போவார்கள்... நம்மைத்தானே தேடி வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு வேண்டியதை நாம் செய்து தர வேண்டாமா.எனவே இந்த 15 நாட்களும் அவர்களுக்கான நாட்களாக நினைத்து நமது ஒவ்வொரு செயலும் இருக்க வேண்டும். அவர்கள் இறந்த திதியில் (தேதி அல்ல) தர்ப்பணம் தர வேண்டும். நம் வசதிக்கு ஏற்ப செய்தால் போதும். மன ஈடுபாட்டுடன் செய்வது முக்கியம்.

தர்ப்பணங்கள் மூன்று வகைப்படும்


1. பார்வணம் 2. ஹிரண்யம் , 3. தர்ப்பணம்.

பார்வணம் என்பது தந்தை, தாய், தாத்தா, பாட்டி, தந்தையின் தந்தை, தாயார் என ஆறு அந்தணர்களை உருவகப்படுத்தி மந்திரங்களை சொல்லி விருந்து தருவது. பிறகு வெற்றிலை பாக்கு, பழம், அரிசி, வாழைக்காய், தட்சணை கொடுக்க வேண்டும். ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது. இதில் விருந்து கிடையாது. தர்ப்பணம் என்பது அமாவாசையன்று செய்வது. இதில் எது வசதியோ அதை செய்யுங்கள். எந்த நாளில் செய்யலாம் என்ற கேள்வி எழும். பொதுவாக தந்தை இறந்த திதியில் செய்வது நலம். ஒருவேளை அந்த திதியில் முடியாவிடில் தாயார் இறந்த திதியில் செய்யலாம். பெற்றோரின் திதி தெரியவில்லை எனில் மகாபரணி, மஹாவ்யதீபாதம், மத்யாஷ்டமி, கஜச்சாயா ஆகிய நாட்களில் செய்யலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று மாலை ... மேலும்
 
temple
 உடுமலை: திருமூர்த்தி மலையில் பெய்த கன மழை காரணமாக, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் ... மேலும்
 
temple
திருப்பூர்: மண்ணரை, சத்யா காலனியிலுள்ள ஸ்ரீ பாலமரத்து கருப்பராய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு ... மேலும்
 
temple
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி ... மேலும்
 
temple
திண்டிவனம்: திண்டிவனம் சாய்பாபா கோவிலில், சாய்பாபா ஆராதனை பெருவிழா நடந்தது.ஸ்ரீ சீரடி சாய் சக்தி கணேசா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.